Tuesday, July 29, 2008

a ப்பார் ஆப்பிள்!!!

வழிநெறி:
தலைப்பு ::
‘ஏ ஃபார் ஆப்பிள் அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.
ஸ்டார்ட்!


அப்படின்னு சொல்லி மங்களூர் சிவா என்னை டாக்கில்
கோத்து விட்டுட்டாரு.

அடிக்கடி நெட்டுல மேயுறது பிளாக்கர், தமிழ்மணம் தான்.

ஆட்டத்தில சேர்த்துக்கிட்டதனால எனக்குத் தெரிஞ்ச
சில தளங்களைச் சொல்கிறேன்.

a

b - BAWARCHI.COM இங்கே அடிக்கடி செல்வேன். நல்ல
ரெசிப்பிக்கள் கிடைக்கும்.

c

d - பிள்ளைகளுக்கு தட்டச்ச சொல்லிக்கொடுக்க இங்கேதான்
போவேன். Dance mat typing.


e - esnips ல் நானும் மெம்பர். அப்பப்போ பாட்டு எடுக்க, கேக்க, அப்லோட்
செய்யன்னு போவேன்.

g - Google gmail இது ரெண்டு இல்லாட்டி எதையோ தொலைத்தது போல
இல்ல இருக்கும்.



H - Hindi lyrix - இங்கேதான் ஹிந்தி பாடல் வரிகள் கிடைக்கும்.

Hindi dictionary

Hindi language-

I - Indian food for ever - இங்கேயும் நல்ல ரெசிப்பிக்கள் எடுக்க போவேன்.

Indus ladies - இது இந்திய பெண்களுக்கான வளைத்தளம்.இதுவும்
நல்லா இருக்கும்.


K - KAUMARAM.COM இது கே.ஆர்.எஸ் அவர்களின் மூலம் எனக்கு
அறிமுகம் ஆன முருக பக்தர்களின் வலைத்தளம்.


L Learning pages - ஒரு ஆசிரியையாக லேட்டஸ்ட் டெக்னிக்ஸ் என்ன?
என்று தெரிந்துகொள்ள அவ்வப்போது போகும் இடம் இது.


M - Montessori.org
சொல்லவே தேவையில்லை. ஏன் அங்கு செல்வேன் என்று உங்களுக்கே
தெரியும்.

R - சர்வ தேச ரெய்கி மையம். ரெய்கி பற்றிய பல விடயங்களுக்கு
இங்கேதான்.

S- shabdakosh - இதுவும் ஆங்கிலம்- ஹிந்தி டிக்‌ஷனரிக்காக.

T- திருப்பதிக்கு போகணும்னாலே பயமா இருக்கு.
அதனால அடிக்கடி இங்க போய் கோவிந்தா கோவிந்தான்னு சொல்லிபுட்டு
வந்துடுவேன்.


W - wikipedia- பிள்ளைகளுக்குத் தேவையான விடயங்கள் எடுக்க இங்கேதான்.


Y - You tube.

ஏதோ நான் உபயோகிக்கும் சில வலைத்தளங்களை கொடுத்திருக்கிறேன்.
இதில் ஒன்றாவது உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்றால் சந்ஷோஷமே.

3 பேரைக் கூப்பிடணுமாமே!
யாரைக்கூப்பிடலாம்!!!

சரி நம்ம நண்பர்கள் இருக்க பயமேன்.

1.நிஜமா நல்லவன்
2.புதுகைச் சாரல்.
3.குசும்பன்

ஆட்டத்தை ஆரம்பிக்கப்பா.




அன்புடன்
புதுகைத் தென்றல்

Monday, July 28, 2008

POL SAMBAL (MASI) - போல் சம்பல் மாசி சேர்த்தது



போல் - தேங்காய்.

இது தேங்காய் துருவலினால் செய்யப்படுவது.

செய்வது சுலபம். சுவையோ அபாரம்.

இடியாப்பம், பருப்பு சோறு, பிரெட் எதனோடும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்

பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் 1 கப்

நறுக்கிய பச்சைமிளகாய் - 1

சில்லி ஃபேலேக்ஸ் அல்லது மிளகாய்ப்பொடி : 1 அல்லது 2 ஸ்பூன்

1 ஸ்பூன் - உப்பு,

மீடியம் சைஸ் எலுமிச்சையின் ரசம் - 2 ஸ்பூன்

மால்டிவியன் ஃபிஷ் (அதாங்க மாசித்தூள்) - 2 ஸ்பூன்.

(இது இல்லாமலும் செய்யலாம்)

செய்முறை:

மேற்சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தால்
மாசி சேர்த்த போல் சம்பல் ரெடி.

அன்புடன் புதுகைத் தென்றல்

Tuesday, July 22, 2008

HAPPY BIRTHDAY MY FRIEND

இன்று பிறந்த நாள் கொண்டாடும் மீ த பர்ஸ்டு
மை ஃபிரண்டிற்கு எங்கள் அனைவரின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இதோ மை ஃபிரண்டிற்கு பிடித்த சித்துவின்
பாடல்கள். சந்தோஷமா! மைஃ பிரண்ட்.






HAVE A FABULOUS BIRTHDAY. :)

Monday, May 19, 2008

முப்பெருந்தினம்.

பொளத்த சமயத்தை சார்ந்தவர்கள் கொண்டாடும் முக்கியமான
நாள் இன்று.







புத்தபிரான் அவதரித்ததும் இந்த பொளர்ணமி அன்று.

அவருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது இந்த பொளர்ணமி தான்.

புத்த தம்மத்தை போதித்த குரு முக்தி அடைந்த தினமும் இந்த
பொளர்ணமி நந்நாள் தான்.




இலங்கையில் இன்று கோலகலாமாக வெசாக் கொண்டாடுவார்கள்.






வெசாக் கூடு பார்க்க அப்பா அழைத்துச் செல்வார். புத்தரின் கதைகள்
படங்களாக அடங்கிய தோரணம், பந்தல்கள் பார்க்க நன்றாக
இருக்கும்.


Thursday, May 15, 2008

மங்களூர் சிவா மாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம்ம மங்களூர் சிவா மாமாவுக்கு இன்றைக்கு
பிறந்தநாள்.

அன்பு மாமாவிற்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்.

Thursday, March 13, 2008

கடிகாரத்தின் கதை இது.

கடிகாரத்தின் கதை மிக பெரியது, சுவாரசியமானதும் கூட.
14ஆம் நூற்றாண்டில்தான் (700 வருடங்களூக்கு முன்பு)
கடிகாரம் (clock) என்ற வார்த்தை உபயோகத்தில் வந்தது.
லத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்ட சொல் "க்ளோக்கா"



இந்தச் சூரிய கடிகாரம்தான் முதலில் பயனில் இருந்தது.
சூரியனின் நிழலை வைத்து நேரத்தை கணக்கிட்டனர்.

பின்பு எகிப்தியர்கள் "கிலிப்சைட்ரா" (clebsydra) எனும்
தண்ணீர் கடிகாரத்தத பயன் படுத்தினர். கிரேக்கில்
தண்ணீர் கடிகாரம் மிக பிரசித்தியாக இருந்தது.





இந்தத்தண்ணீர் கடிகாரம் முறையாக இல்லை என்று
எகிப்தியர்காளும், பாப்லோனியர்களும் நினைத்தனர்.
1577 ஜோஸ்ட் பர்கி (Jost Burgi) என்பவர் தான் முதலில்
நிமிட முள் கொண்ட கடிகாரத்தை வடிவமைத்தார்.
பெண்டுலத்தால் செயற்பட்டது.

1852ல் பிரிட்டன "கிரின்விச் நேரத்தை" அறிமுகம் செய்தது.
1882 ல் அமெரிக்கா 4 ஸ்டாண்டர் நேரத்தை அறிமுகம்
செயதது. இன்றளவும் இதுதான் நடைமுறையில் இருக்கிறது.



1999ல் அறிவியலார் செசியம் கடிகாரத்தை (Cesium
Fountain atomic clock) கண்டு பிடித்தனர். இதுதான்
துல்லிய நேரத்தைக் காட்டும் கடிகாரமாகும்.
































இது நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப் படும் கடிகாரம்.


இதுதான் அந்தக் காலக் கடிகாரம்..










Thursday, March 6, 2008

மழலையர் பாடல்கள்

எங்களுக்கு லிங்க் கொடுத்துட்டாங்க எங்கம்மா,

இதோ அம்மா எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கும்
தமிழ் பாடல்கள் சில.


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.



அணிலே அணிலே ஓடிவா!
அழகிய அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா!
குண்டு பழம் கொண்டுவா!
பாதி பழம் உன்னிடம்
மீதி பழம் என்னிடம்!
கொறித்து கொறித்து தின்னலாம்!


லட்டு லட்டு லட்டு
தட்டு நிறைய லட்டு

வெட்டு வெட்டு வெட்டு
இஷ்டம் போல வெட்டு


இந்தப் பாட்டு அம்மா பாடக் கேட்டிருக்கிறோம்.

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா...

காலை எழுந்ததும் படிப்பு
(ஓர் ரெண்ட் ரெண்டு
ஈர் ரெண்ட் 4)
பின்பு கனிவுக் கொடுக்கும் நல்ல பாட்டு
(ச..ரி..க..ம..ப..த..நி.. ஸ)
மாலை முழுதும் விளையாட்டு
(சடுகுடு சடுகுடு சடுகுடு)
என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா.

நாங்க யாருக்கும் லிங்க் கொடுக்கலை :)

வருகைக்கு நன்றி.