Monday, February 8, 2010

அநன்யா மஹாதேவன் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்

இன்று திருமணநாள் கொண்டாடும் அநன்யா மஹாதேவன்
இருவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அநன்யாவின் வலைப்பூ இங்கே.


அநன்யாவுக்கு பிடித்த கமலஹாசன் அவர்களின்
பாடல்கள்.

Friday, January 22, 2010

நிஜமா நல்லவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று நிஜம்ஸ் தம்பியின் பிறந்த நாள்.

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்
ஹேப்பி பர்த்டே டூ யூ.

Tuesday, January 5, 2010

HAPPY BIRTHDAY AYILYAN BOSS

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சின்னபாண்டி என
அன்போடு அழைக்கப்படும் ஆயில்யன் பாஸ் அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

எல்லா இடங்களிலும் ராசியாக இருப்பவர் இந்த கடகம்
வலைப்பூக்காரர்.
பெட்ரோமாக்ஸ் லைட் எனும் இந்தப் பதிவு எனக்கு ரொம்ப
பிடிக்கும்.


எட்டில் வாழ்க்கை எனும் இந்தப் பதிவு படிச்சிருக்கீங்களா??

1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

* ஆயில்யன்

Monday, January 4, 2010

RECESSIONல் மாட்டிய ஒரு தெலுங்கு பிரம்மச்சாரியின் நிலை!!!!!

எந்த ஒரு அம்மாவுக்கும் வயது வந்த மகனுக்கு ஒரு
கால்கட்டு போட்டு, மாலையும் கழுத்துமாக பார்க்கும்
ஆசை உண்டு. ஆனா இப்ப இந்த ரெஷஷ்ன் வந்து
அந்த ஆசைக்கும் ஆப்பு வெக்குது.

பாவம் அம்மா கோவை சரளா தன் மகனைக் கல்யாணம்
செஞ்சுக்க சொல்லிக்கேட்க அந்த ரவணம்மாவின் மகன்
தான் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும் இந்த
பாடல் இப்போ சூப்பர் ஹிட்.

பம்பர் ஆஃபர் எனும் தெலுங்கு படத்தின் பாட்டு இது.
நோ தெலுகுன்னு சொல்றவங்க பாட்டின் அர்த்தம்
புரிஞ்சுக்க தமிழில் விளக்கமும் கொடுக்கறேன்.

ஆபீஸ்ல இப்ப இருந்தாலும் வீட்டுக்குபோயாவது
இந்த வீடியோவை பாத்திடுங்க. கோவை சரளா
டான்ஸ் சூப்பர். :)))மஹாராணி ஸ்ரீ ரவணம்மாவுக்கு அவரது மகன்
சொல்லிக்கொள்வது என்னவென்றால் ரெஷஷனில்
பலருக்கு வேலை போய்விட்டது.
ரியல் எஸ்டேட் ஃபீல்ட் நொடிச்சு போச்சு,
சாஃப்டெ வேர் ஃபீல்ட் அடி வாங்கியிடுச்சு.

இதெல்லாம் பெரிய மனது செஞ்சு நீங்க புரிஞ்சுகிட்டு
என் கல்யாணத்தை நிறுத்தணும்.

அமெரிக்காவுலேர்ந்து நம்மாளுங்க எல்லாம்
பொட்டியை கட்டி திரும்ப வந்துகிட்டு இருக்காங்களாம்.
கட்ட பணம் இல்லாம காரை துபாய் ஏர்போர்டுலேயே
விட்டுட்டு வந்திடறாங்க.
உன் புருஷன் குமாஸ்தா, நானோ உபயோகமில்லாதவன்
இந்த நிலையில் கல்யாணம் செஞ்சுக்கத்தான் வேணுமா??

தான் நுழையவே சந்தில்லை. இதில் கழுத்துக்கு டோல்
தேவையா?

இப்படி இளைஞனின் இன்றைய நிலையைச் சொல்லும்
பாடல். வார்த்தைகள் புரியும். கொஞ்சம் கவனிச்சு
கேட்டுப்பாருங்க.

:))))