Friday, August 22, 2008

குட்டிக்கண்ணனின் பிறந்த நாள்.



தீராத விளையாட்டுப்பிள்ளை



கோகுலகண்ணனைப் பணிவோம்.

Monday, August 4, 2008

தமிழ் சமையல் இவ்வாரத்திட்டம்- இனிப்பு

இவ்வாரத்திட்டம் இனிப்பிற்காக என் பதிவு.

இது போளி. பொப்பட்லு தெலுங்கு, உப்பட்லு கன்னடம்,
பூரண் போளி - மராதி.

எங்களது தெலுங்கு வருடப்பிறப்பன்று கட்டாயம்
செய்யப்படவேண்டிய இனிப்பு.

தேவையான பொருட்கள்:

மைதா- 1 கப்

கடலைப் பருப்பு - 1 கப்

சர்க்கரை - 1 கப்

ரீஃபைண்ட் ஆயில், தண்ணீர் இரண்டும்
சம அளவு (தனித்தனி டம்பளரில் இரண்டும்
ஒரே அளவு இருக்க வேண்டும்)

உப்பு கொஞ்சம்,
மஞ்சள் தூள் 1 சிட்டிகை.

தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை:

மேல்மாவு தயாரிக்க:
மைதாமாவில் மஞ்சள், உப்பு சேர்த்து
ஒருமுறை எண்ணைய், ஒருமுறை தண்ணீர்
என்ற விகிதத்தில் சேர்த்து சப்பாத்தி மாவு
பதத்தில் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பூரணம் செய்ய:

கடலைப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.

ஆறியதும் சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில்
ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.

கடாயில் நெய் கொஞ்சம் விட்டு,
தேங்காய்த்துருவல், அரைத்து வைத்துள்ள
பருப்பு கலவை எல்லாம் போட்டு சுருள்
வதக்கி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல்
வந்ததும் இறக்கி வைக்கவும்.






மேல்மாவில் கொஞ்சம் எடுத்து சப்பாத்தி போல்
செய்து நடுவில் பூரணம் வைக்கவும்.





பூரணத்தை நடுவில் வைத்து மூடி
கொஞ்சம் கையால் தட்டி
அடுப்பில் இருபக்கமும் சுட்டு எடுக்கவும்.

சுடும்பொழுது எண்ணைய் விட தேவையில்லை.
மாவில் இருக்கும் எண்ணையே போதும்.




கார் பயணம் இனிதாக அமைய..

காரில் போகும்போது பாதுகாப்பு குறித்து பலரும்
யோசிப்பது இல்லை. மூடிய கதவுகள் என்றாலும்
காரிலும் அவதானமாக இருக்க வேண்டும்.



காரின் ஓட்டுனரும், முன் இருக்கையில் அமர்பவரும்
கண்டிப்பாக ”சீட் பெல்ட்” அணிய வேண்டும்.
இது நமது நாட்டில் சட்டமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் அதிகம் பேர் பின்பற்றுவதில்லை.



குறைந்த தூரமோ, குறைவான வேகமோ
கணக்கில்லை. சீட் பெல்ட் அணியாமல்
பயணம் செய்யாதீர்கள்.


ஹா, போட்டா என்ன? போடாட்டி என்ன?
என்று கேட்பவர்கள் இங்கே போய்
சீட் பெல்ட் போடாவிட்டால் என்ன ஆகும்
என்பதை பார்த்தீர்களானால் அந்த அனுபவத்தை
ரோடில் பெற விழைய மாட்டீர்கள்.
thinkseatbelts.com



இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது
தலைக்கவசம் நமது உயிர் காக்கும்.

நம் உயிர் காக்கும் என்று தெரிந்தாலும்
பின்பற்றாமல் இருப்பது ஏனோ?

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்
பெண்களின் துப்பட்டா ஒன்றா காற்றில் பறக்கிறது,
இல்லையேல், சக்கரத்தில் மாட்டாமல் போவார்களா?
என்று கேள்வி எழுப்பும் விதத்தில் தொங்கிக்கொண்டு
போகிறது.

எத்தனை சம்பவங்கள்? எத்தனை விபத்துக்கள்?
தெரிந்தும் தெரியாத மாதிரி தலைக்கவசம்
அணியாமல் செல்கிறார்கள்.

எனது உறவினர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்தார்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச்
சென்றவர், நாய் குறுக்கே வர திருப்பிய
வேகத்தில் நிலைதவறி கீழே விழுந்து தலை
பாறையில் மோதியது.
ஒரு மாதக்காலம் கோமாவில் கிடந்து,
பத்தாவது படிக்கும் மகனையும், மனைவியையும்
விட்டுவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார்.

இருந்த பணம் அவரது மருத்துவமனை செலவுகளுக்கே
போய்விட்டது.


வண்டியில் அதிவேகமாக செல்வது
நீங்களே எமனை கால் போட்டு
கூப்பிடுவது மாதிரி.

தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது
நான் ரெடி நீ ரெடியா என்று எமனிடம் கேட்பது
போல்.

காரின் சீட் பெல்ட் போடாமல் பயணிப்பது
அடுத்த பயணம் எமனுடன் புஷ்பக விமானத்தில்
போகப்போகும் பயணத்தை உறுதி படுத்தும்.


தங்களின் நலம் விரும்பி.

Saturday, August 2, 2008

HAPPY BIRTHDAY SUREKA



நமது புதுகைக்கு பெருமை சேர்க்கும் மண்ணின் மைந்தர்,
புதுகை பிளாக்கர்களின் தலைவர்,
இனிய நண்பர் சுரேகாவிற்கு இன்று பிறந்த நாள்.


அவருக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.




Friday, August 1, 2008

கேட்டுட்டாங்கய்யா நண்பர்களும், தோழியும். கொடுக்காட்டி எப்படி? :)

எனது ஆடி அமாவாசை சிறப்பு பதிவுக்கு வந்து அம்பி போட்ட பின்னூட்டத்திற்கு
எல்லோரும் ரிப்பீட்டு ரிப்பீட்டுன்னு மறுக்கா கூவிக்கினே இருந்தாங்க.

கேட்டுட்டாங்க. அதான் நானே செஞ்சு கொடுத்திடலாம்னு.

சீக்கிரமா எந்திரிச்சாலும் (அதிகாலை 3 மணிக்கு எந்திரிச்சேன் )
மத்த வேலைகளுக்கு இடையே
கொஞ்சமாத்தான் செய்ய முடிஞ்சது.

அம்பி, அப்துல்லா, நிஜமா நல்லவன், புது வண்டு ,
காரக்கொழுட்டையைப் பத்தி கேட்ட கயல்விழி
உங்க எல்லோருக்காகவும் இதோ..

தேங்காய்ப்பூரண கொழுக்கட்டை,
ஏரோப்ளேன் கொழுக்கட்டை,
காரக் கொழுக்கட்டை.