Wednesday, July 22, 2009

ஏமாற்றத்தை தந்த சூரிய கிரஹணம் :((

நீண்ட சூரிய கிரஹணத்தை பாத்திடலாம்னு
அதுக்கான ஷ்பெஷல் கண்ணாடி எல்லாம் வாங்கி
ரெடியா வெச்சிருந்தோம்.


இன்னைக்கு எங்களூக்கு பள்ளி விடுமுறை என்பதால்
நல்லா எஞ்சாய் செஞ்சு பாக்கலாம்னு நினைச்சோம்.

ப்ச்...

காலையில் 6 மணிக்கே எழுந்து கண்ணாடியை
எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போனோம்.


அங்கே மேகமூட்டமான வானத்தைதான் பாத்தோம்!!!
நேற்று இரவு மழை பெய்தது.. அதே வானிலை
இன்னைக்கும் தொடர்வதால் ஒரே மேக மூட்டம்.


சரின்னு டீவியைப்போட்டு பாத்தா
குருஷேத்ரா, வாரனாசி, டெல்லி ஆகிய
இடங்களில் எடுத்த படங்களைக் காட்டினாங்க.

நம்ம ஊரு சேனல்ல என்ன சொல்றாங்கன்னு
பாப்போம்னு டீவி9 சேனலை போட்ட
ஹைதராபாத்தில் இருக்கும் பிர்லா
கோளரங்கத்து அதிகாரி ஒருவர் பேட்டிக்கொடுத்து
கிட்டு இருந்தார்.

”ஹைதராபாத்தில் முழு சூரிய கிரஹணம்
தெரிய வாய்ப்பில்லை. இது தெரியாமல்
பல மக்கள் வந்து ஏமாற்றத்துடன்
திரும்பிச் செல்கிறார்கள். Partial elcipse
தான் இங்கே பார்க்க முடியும். அது
இன்னும் 2 வருடங்களில் வரலாம்”
என்று சொன்னார்.


ம்ம்ம். அடுத்த முழு சூரியகிரஹணம்
105 வருடம் கழித்து தான் வருமாம்.

Wednesday, July 8, 2009

:))))))))))))))))))))))

நேற்று இரவு மணி 9..

”அங்க மணி எவ்வளவு அப்பா?” கிட்ட கேட்டோம்.

மணி 11.45 அப்படின்னு அப்பா சொல்ல,
ஆஹா இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு,
முழிச்சிருந்து நம்ம திட்டத்தை செயல் படுத்தணும்னு
நாங்க இரண்டுபேரும் முடிவு செஞ்சோம். :)))

கரெக்டா மணி 9.15 உடனே போன் எடுத்து
அந்த நம்பரை டயல் செஞ்சோம்.

ட்ரிங்..ட்ரிங்க்..ட்ரிங்க்.

ம்ம்ஹூம் எடுக்கலை. மிட் நைட் ஆச்சே!!
இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் செய்யலாம்னு செஞ்சோம்.

போன் எடுத்தாச்சு...” குட் மார்னிங், ஹேப்பி பர்த்டே டு யூ”
அப்படின்னு பாடினோம்.

யெஸ், இன்னைகு எங்க கார்த்தி மாமாவுக்கு பர்த்டே.
மிட் நைட்ல தூக்கத்தை கெடுத்து விஷஷ் சொல்லிட்டோம்.
ஆனாலும் இங்கே ஒரு பதிவு.



வீ லவ் யூ சோ மச் மாமா.

ஹாப்பி பர்த்டே!!!!!!



***************************
டிஸ்கி: எங்க பர்த்டேவுக்கு விடிய காலையில் 5 மணிக்கு
போன் போட்டு எங்க தூக்கத்தை கெடுத்ததால மாமாவுக்கு
ராத்திர் 12 மணிக்கு போன் போட்டு விஷஷ் சொன்னோம்.
:)))))))))))))))))). மாமா இருப்பது சிங்கையில்.

Tuesday, July 7, 2009

தக்‌ஷின் சித்ராவில் நாங்கள்

சென்ற விடுமுறைக்கு நாங்கள் மாமல்லபுரம் சென்றிருந்தோம்.
அப்போது மாயாஜால், தக்‌ஷின் சித்ரா, எம்.ஜீ.எம், முதலைகள்
பண்ணை எல்லாம் பார்த்தோம்.


தக்‌ஷின் சித்ரா- தெந்நிந்தியாவில் வீடுகள் எப்படி இருக்கும்னு
அங்கே தெரிஞ்சுக்கலாம்னு அப்பா சொன்னாங்க.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வில் வீடுகள்
அமைப்பு எப்படி இருக்கும்னு அங்க போனா பாக்கலாம்.

கர்நாடகாவின் வீடு ஒன்றில் எடுத்த படம் இது.








அங்கே போன போது, ஜாலிக்காக கிளி ஜோசியம் பார்த்தோம்.
சீட்டை எடுத்து கொடுத்திட்டு “அக்கா.. அக்கா” அப்படின்னு
அந்த கிளி பேசினது க்யூட்.




எனக்கு தமிழ்நாட்டு வீடுகள் ரொம்ப பிடிச்சிருந்தது.
ஒரு வீட்டுல கூடை பின்னுதல் சொல்லிக்கொடுத்தாங்க.
நானும் அண்ணாவும் கூடை சின்னதுதான் செஞ்சோம்.
அங்கே அந்தக்கால மாவரைக்கர மிஷின் இருந்துச்சு.



கல்லால ஆன அதை இழுக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
மிக்ஸி, மிஷன் எல்லாம் இல்லாம அப்ப ரொம்ப
கஷ்டப்பட்டு மாவரைச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்.

அம்மா சொன்னாங்க அதனாலதான் அப்போதைய
பெண்களுக்கு கை வலிமை ஜாஸ்தி. திருடனைக்கூட
அடிச்சே விரட்டிடுவாங்கன்னு. இருக்கும்!! அந்த உரல்
எவ்வளவு ஸ்ட்ராங்!!

மழைநீரை சேகரிச்சு கீழே கொண்டு வரும் தோணித்தகரம்,
முற்றம் இதெல்லாம் காட்டி அம்மா சொன்னப்ப அது
மாதிரி ஒரு வீடு கட்டலாம்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன்.

Monday, June 29, 2009

நாங்க செஞ்சது.

எங்களுக்கு லீவு விட்டிருந்த போது நடந்தது இது.
எங்களூக்கு ரொம்ப பிடிக்கும்னு அம்மா
சன்னா செஞ்சு வெச்சிருந்தாங்க. இரவு டிபனுக்கு
சூடா பூரி இல்லாட்டி சப்பாத்தி செஞ்சு சன்னாவை
சூடு செஞ்சிட்டா டின்னர் ரெடின்னு அம்மா
ப்ளான் போட்டு வெச்சிருந்தாங்க.

அன்னைக்கு அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம
போயிடிச்சு. பயங்கர தலைவலி அம்மாவுக்கு.
”ராத்திரி சாப்பாடு வெளியிலேர்ந்து கொண்டு
வரலாம்னு அப்பா சொன்னாங்க”.

அம்மா செஞ்சு வெச்சிருக்கற சன்னாவை விட
மனசில்லை. :))))

அப்பாவை மாவு பிசைஞ்சு கொடுத்து சொல்லி
பக்கத்துலே நிக்கச் சொன்னோம்.

அம்ருதா பூரி ஒத்திகொடுக்க...



நான் அதை எண்ணையில் போட்டு எடுத்தேன்.
அப்பா தான் செய்வதா சொல்லியும் நாங்க
விடலை. அம்மாதான் எங்களுக்கு சொல்லிக்
கொடுத்திருக்காங்களே!!



இரவு சுடச்சுட பூரி + சன்னா ரெடியாகிடிச்சு.
அம்மா செய்வது போல அப்பா வட்ட வட்டமா
வெங்காயத்தை வெட்டி தட்டில வெச்சு அமர்க்களமா
டேபிள் செட் செஞ்சாங்க.


இதுவரைக்கும் தோசை & காபி எக்ஸபர்டா இருந்த
நான் பூரி எக்ஸ்பர்டாகவும், சப்பாத்தி எக்ஸ்பர்டா
இருந்த அம்ருதா பூரி மாஸ்டராகவும்
மாறிட்டோமே.

அம்மா, அப்பா ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
அம்மா,அப்பாவுக்கு உதவியதுல எங்களுக்கும்
சந்தோஷம்.

ஆஷிஷ்

வணக்கம், வந்தனம்....

அங்கிள்ஸ் & ஆண்டீஸ்,

எல்லோருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

எல்லோரும் நலமா??? நாங்க நல்லா இருக்கோம்.

இங்க வந்ததுக்கப்புறம் கொஞ்சம் பிசியாகிட்டோம்.
அதனால் தொடர்ந்து எழுதலை.




கத்துகிட்ட தமிழை மறந்திடக்கூடாது, அதனால்
பதிவு எழுதுங்கன்னு அம்மா கண்டிப்பா சொல்லிட்டாங்க.

இனி இந்த ப்ளாக்ல நானும் அண்ணாவும் நிறைய்ய
எழுதுவோம்.

இதைத் தவிர எங்களோட இன்னொரு ப்ளாக்லயும்
எழுதுவோம். அங்கயும் கண்டிப்பா வாங்க.

அண்ணாது

என்னோடது


சி யூ ஸூன்.

அன்புடன்
அம்ருதா

Thursday, February 5, 2009

ஆக்‌ஷனாம்ல!!! நாங்களும் வர்றோம்.

ஆஹா, எம்புட்டு சொகமா இருக்கு


தாத்தாவும் நானும் நீச்சல் குளத்தில்.



வெச்ச குறித்தப்பாது! அப்பாவா? நானா?
ரெண்டுல ஒரு கை பாத்திடலாம்.

Monday, October 20, 2008

வந்தார்கள்!!!! கொன்றார்கள்

பரிசல்காரனின் இந்தப் பதிவைப் படித்ததும் இந்தப் பதிவை
போட்டே ஆகவேண்டுமென்று தோன்றியது.

விருந்தினர் போற்றுதல் நம் பண்பு. நமக்கு இல்லாவிட்டாலும்
விருந்தினருக்கு கொடுக்க வேண்டுமென்றெல்லாம்
சொல்லிவைத்திருக்கிறார்கள்.

நான் வளர்ந்தது அம்மம்மாவிடம். அம்மம்மாவின்
பாலிசி வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பாடு
கொடுத்தாக வேண்டும். குறைந்த பட்சமாக காபி/டீ
பிஸ்கட், முடிந்தால் டிபன், 1 மணி நேரமிருந்தால்
விருந்தே ஏற்பாடு செய்துவிடுவார். எனக்கும்
இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது.

திருமணத்திற்கு பிறகு அயித்தானின் வீட்டிலும்
இதே வழக்கம் என்பதால் விருந்தினர் போற்றுதல்
எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.

(விருந்தினராக இல்லாவிட்டாலும் பிளம்பர்
எலக்ட்ரீசியனுக்கு கூட டீ கொடுத்துதான்
அனுப்புவோம்)

அயித்தான் ஹிந்துஸ்தான் லீவரில் பணிபுரிந்த
போது “BEST HOSPITALITY’ விருது எனக்கு
கிடைத்தது.

இலங்கையில் இருந்த போதும் மாதம் 3 அல்லது
4 முறை நண்பர்களை அழைத்து விருந்து வைத்ததுண்டு.
அயித்தானின் எம்.டி, முதற்கொண்டு இந்தியாவிலிருந்து
யார்வந்தாலும் ஊருக்கு கிளம்பும் அன்று
என் கையால் விருந்து சாப்பிட்டுத்தான் கிளம்புவார்கள்.
இது அவர்களின் ஐடினரியில் எழுதப்படாத சட்டம்.
நான் மிகவும் விரும்பிய ஒன்று இது.

ஒரு நாள், அரைநாள் வந்து செல்லும் விருந்தினர்களால்
பிரச்சனை இருப்பதில்லை. 2 நாளுக்கு மேல் தங்குபவர்கள்
படுத்தும் பாடு அனைவரும் அறிந்ததே.

தன் வீட்டில் கிடைக்கும் சுகங்கள் சென்ற இடத்திலும்
கிடைக்க வேண்டுமென்று நினைப்பது,(உதாரணம்
24 மணி நேரமும் ஓடும் டீவி, மணிக்கொரு தரம்
காபி, இரவு படுக்கும் முன் பால், போர்ன்விடாதான்
வேண்டுமென்று இம்சை கொடுப்பது. இத்யாதிகள்.

அடுத்தவர் வீட்டிற்கு செல்லும்போது அந்தச் சூழ்நிலைக்கு
தகுந்தார்போல் தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ளத்
தெரியாதவர்கள் விருந்தினராகச் செல்லவே கூடாது.

இதைவிட கொடுமை விருந்தினரை ஊர் சுற்றிப்பார்க்க
அழைத்துச் செல்லுதல். அவர்களை ஊர் சுற்ற அழைத்துச்
சென்று பர்ஸ் காலியாகிவிடுமே என்று வீட்டிலும்
சமைக்க வேண்டும். வந்தவர்களோ கால் நீட்டி அமர்ந்து
என்ன வேண்டுமென மெனு சொல்வார்கள்.

அதே போல் அவர்கள் வீட்டிற்கு நாம் சென்றால்
என்னால் இதுதான் முடியும்? எங்க வீட்டுக்காரருக்கு
சீக்கரம் தூங்கவேண்டும், டீவியை ஆஃப் செஞ்சுடறேன்
என்று சொல்வார்கள் :(

இது பலரின் அனுபவம். இப்படி இருக்கையில் எங்கே
விருந்தினர் போற்றுதும்.

1. விருந்தினர் வருகையை எப்படி சமாளிப்பீர்கள்?

2. விருந்தினராக செல்லும்போது நாம் பின்பற்ற வேண்டிய
நற்குணங்கள் எவை?

3. நம்மை கேட்காமல் ஃபிரிஜிலிர்ந்து எடுத்து திண்ணும்
விருந்தினரை என்ன செய்யலாம்?

4. விருந்தினராக தங்க வருபவரிடம் நீங்கள் என்ன
எதிர் பார்ப்பீர்கள்?

5. விருந்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று
எதிர் பார்ப்பீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கு பதிலாக பதிவுபோட்டு டேக்
செய்ய நான் அழைப்பது

பரிசல்காரன்

முத்துலட்சும்