Wednesday, July 30, 2008

HAPPY BIRTHDAY ABDULLA
புதுகை.எம்.எம்.அப்துல்லாவிற்கு இன்று பிறந்த நாள்.

ஆண்டவன் அருளில் எல்லா வளமும் பெற்று
பல்லாண்டு வாழவாழ்த்துக்கள்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்துல்லா.
சுவரொட்டியிலும் வாழ்த்துச் சொல்லலாம்.

Tuesday, July 29, 2008

a ப்பார் ஆப்பிள்!!!

வழிநெறி:
தலைப்பு ::
‘ஏ ஃபார் ஆப்பிள் அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.
ஸ்டார்ட்!


அப்படின்னு சொல்லி மங்களூர் சிவா என்னை டாக்கில்
கோத்து விட்டுட்டாரு.

அடிக்கடி நெட்டுல மேயுறது பிளாக்கர், தமிழ்மணம் தான்.

ஆட்டத்தில சேர்த்துக்கிட்டதனால எனக்குத் தெரிஞ்ச
சில தளங்களைச் சொல்கிறேன்.

a

b - BAWARCHI.COM இங்கே அடிக்கடி செல்வேன். நல்ல
ரெசிப்பிக்கள் கிடைக்கும்.

c

d - பிள்ளைகளுக்கு தட்டச்ச சொல்லிக்கொடுக்க இங்கேதான்
போவேன். Dance mat typing.


e - esnips ல் நானும் மெம்பர். அப்பப்போ பாட்டு எடுக்க, கேக்க, அப்லோட்
செய்யன்னு போவேன்.

g - Google gmail இது ரெண்டு இல்லாட்டி எதையோ தொலைத்தது போல
இல்ல இருக்கும்.H - Hindi lyrix - இங்கேதான் ஹிந்தி பாடல் வரிகள் கிடைக்கும்.

Hindi dictionary

Hindi language-

I - Indian food for ever - இங்கேயும் நல்ல ரெசிப்பிக்கள் எடுக்க போவேன்.

Indus ladies - இது இந்திய பெண்களுக்கான வளைத்தளம்.இதுவும்
நல்லா இருக்கும்.


K - KAUMARAM.COM இது கே.ஆர்.எஸ் அவர்களின் மூலம் எனக்கு
அறிமுகம் ஆன முருக பக்தர்களின் வலைத்தளம்.


L Learning pages - ஒரு ஆசிரியையாக லேட்டஸ்ட் டெக்னிக்ஸ் என்ன?
என்று தெரிந்துகொள்ள அவ்வப்போது போகும் இடம் இது.


M - Montessori.org
சொல்லவே தேவையில்லை. ஏன் அங்கு செல்வேன் என்று உங்களுக்கே
தெரியும்.

R - சர்வ தேச ரெய்கி மையம். ரெய்கி பற்றிய பல விடயங்களுக்கு
இங்கேதான்.

S- shabdakosh - இதுவும் ஆங்கிலம்- ஹிந்தி டிக்‌ஷனரிக்காக.

T- திருப்பதிக்கு போகணும்னாலே பயமா இருக்கு.
அதனால அடிக்கடி இங்க போய் கோவிந்தா கோவிந்தான்னு சொல்லிபுட்டு
வந்துடுவேன்.


W - wikipedia- பிள்ளைகளுக்குத் தேவையான விடயங்கள் எடுக்க இங்கேதான்.


Y - You tube.

ஏதோ நான் உபயோகிக்கும் சில வலைத்தளங்களை கொடுத்திருக்கிறேன்.
இதில் ஒன்றாவது உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்றால் சந்ஷோஷமே.

3 பேரைக் கூப்பிடணுமாமே!
யாரைக்கூப்பிடலாம்!!!

சரி நம்ம நண்பர்கள் இருக்க பயமேன்.

1.நிஜமா நல்லவன்
2.புதுகைச் சாரல்.
3.குசும்பன்

ஆட்டத்தை ஆரம்பிக்கப்பா.
அன்புடன்
புதுகைத் தென்றல்

Monday, July 28, 2008

POL SAMBAL (MASI) - போல் சம்பல் மாசி சேர்த்ததுபோல் - தேங்காய்.

இது தேங்காய் துருவலினால் செய்யப்படுவது.

செய்வது சுலபம். சுவையோ அபாரம்.

இடியாப்பம், பருப்பு சோறு, பிரெட் எதனோடும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்

பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் 1 கப்

நறுக்கிய பச்சைமிளகாய் - 1

சில்லி ஃபேலேக்ஸ் அல்லது மிளகாய்ப்பொடி : 1 அல்லது 2 ஸ்பூன்

1 ஸ்பூன் - உப்பு,

மீடியம் சைஸ் எலுமிச்சையின் ரசம் - 2 ஸ்பூன்

மால்டிவியன் ஃபிஷ் (அதாங்க மாசித்தூள்) - 2 ஸ்பூன்.

(இது இல்லாமலும் செய்யலாம்)

செய்முறை:

மேற்சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தால்
மாசி சேர்த்த போல் சம்பல் ரெடி.

அன்புடன் புதுகைத் தென்றல்

Tuesday, July 22, 2008

HAPPY BIRTHDAY MY FRIEND

இன்று பிறந்த நாள் கொண்டாடும் மீ த பர்ஸ்டு
மை ஃபிரண்டிற்கு எங்கள் அனைவரின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இதோ மை ஃபிரண்டிற்கு பிடித்த சித்துவின்
பாடல்கள். சந்தோஷமா! மைஃ பிரண்ட்.


HAVE A FABULOUS BIRTHDAY. :)