Wednesday, July 22, 2009

ஏமாற்றத்தை தந்த சூரிய கிரஹணம் :((

நீண்ட சூரிய கிரஹணத்தை பாத்திடலாம்னு
அதுக்கான ஷ்பெஷல் கண்ணாடி எல்லாம் வாங்கி
ரெடியா வெச்சிருந்தோம்.


இன்னைக்கு எங்களூக்கு பள்ளி விடுமுறை என்பதால்
நல்லா எஞ்சாய் செஞ்சு பாக்கலாம்னு நினைச்சோம்.

ப்ச்...

காலையில் 6 மணிக்கே எழுந்து கண்ணாடியை
எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போனோம்.


அங்கே மேகமூட்டமான வானத்தைதான் பாத்தோம்!!!
நேற்று இரவு மழை பெய்தது.. அதே வானிலை
இன்னைக்கும் தொடர்வதால் ஒரே மேக மூட்டம்.


சரின்னு டீவியைப்போட்டு பாத்தா
குருஷேத்ரா, வாரனாசி, டெல்லி ஆகிய
இடங்களில் எடுத்த படங்களைக் காட்டினாங்க.

நம்ம ஊரு சேனல்ல என்ன சொல்றாங்கன்னு
பாப்போம்னு டீவி9 சேனலை போட்ட
ஹைதராபாத்தில் இருக்கும் பிர்லா
கோளரங்கத்து அதிகாரி ஒருவர் பேட்டிக்கொடுத்து
கிட்டு இருந்தார்.

”ஹைதராபாத்தில் முழு சூரிய கிரஹணம்
தெரிய வாய்ப்பில்லை. இது தெரியாமல்
பல மக்கள் வந்து ஏமாற்றத்துடன்
திரும்பிச் செல்கிறார்கள். Partial elcipse
தான் இங்கே பார்க்க முடியும். அது
இன்னும் 2 வருடங்களில் வரலாம்”
என்று சொன்னார்.


ம்ம்ம். அடுத்த முழு சூரியகிரஹணம்
105 வருடம் கழித்து தான் வருமாம்.

Wednesday, July 8, 2009

:))))))))))))))))))))))

நேற்று இரவு மணி 9..

”அங்க மணி எவ்வளவு அப்பா?” கிட்ட கேட்டோம்.

மணி 11.45 அப்படின்னு அப்பா சொல்ல,
ஆஹா இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு,
முழிச்சிருந்து நம்ம திட்டத்தை செயல் படுத்தணும்னு
நாங்க இரண்டுபேரும் முடிவு செஞ்சோம். :)))

கரெக்டா மணி 9.15 உடனே போன் எடுத்து
அந்த நம்பரை டயல் செஞ்சோம்.

ட்ரிங்..ட்ரிங்க்..ட்ரிங்க்.

ம்ம்ஹூம் எடுக்கலை. மிட் நைட் ஆச்சே!!
இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் செய்யலாம்னு செஞ்சோம்.

போன் எடுத்தாச்சு...” குட் மார்னிங், ஹேப்பி பர்த்டே டு யூ”
அப்படின்னு பாடினோம்.

யெஸ், இன்னைகு எங்க கார்த்தி மாமாவுக்கு பர்த்டே.
மிட் நைட்ல தூக்கத்தை கெடுத்து விஷஷ் சொல்லிட்டோம்.
ஆனாலும் இங்கே ஒரு பதிவு.வீ லவ் யூ சோ மச் மாமா.

ஹாப்பி பர்த்டே!!!!!!***************************
டிஸ்கி: எங்க பர்த்டேவுக்கு விடிய காலையில் 5 மணிக்கு
போன் போட்டு எங்க தூக்கத்தை கெடுத்ததால மாமாவுக்கு
ராத்திர் 12 மணிக்கு போன் போட்டு விஷஷ் சொன்னோம்.
:)))))))))))))))))). மாமா இருப்பது சிங்கையில்.

Tuesday, July 7, 2009

தக்‌ஷின் சித்ராவில் நாங்கள்

சென்ற விடுமுறைக்கு நாங்கள் மாமல்லபுரம் சென்றிருந்தோம்.
அப்போது மாயாஜால், தக்‌ஷின் சித்ரா, எம்.ஜீ.எம், முதலைகள்
பண்ணை எல்லாம் பார்த்தோம்.


தக்‌ஷின் சித்ரா- தெந்நிந்தியாவில் வீடுகள் எப்படி இருக்கும்னு
அங்கே தெரிஞ்சுக்கலாம்னு அப்பா சொன்னாங்க.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வில் வீடுகள்
அமைப்பு எப்படி இருக்கும்னு அங்க போனா பாக்கலாம்.

கர்நாடகாவின் வீடு ஒன்றில் எடுத்த படம் இது.
அங்கே போன போது, ஜாலிக்காக கிளி ஜோசியம் பார்த்தோம்.
சீட்டை எடுத்து கொடுத்திட்டு “அக்கா.. அக்கா” அப்படின்னு
அந்த கிளி பேசினது க்யூட்.
எனக்கு தமிழ்நாட்டு வீடுகள் ரொம்ப பிடிச்சிருந்தது.
ஒரு வீட்டுல கூடை பின்னுதல் சொல்லிக்கொடுத்தாங்க.
நானும் அண்ணாவும் கூடை சின்னதுதான் செஞ்சோம்.
அங்கே அந்தக்கால மாவரைக்கர மிஷின் இருந்துச்சு.கல்லால ஆன அதை இழுக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
மிக்ஸி, மிஷன் எல்லாம் இல்லாம அப்ப ரொம்ப
கஷ்டப்பட்டு மாவரைச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்.

அம்மா சொன்னாங்க அதனாலதான் அப்போதைய
பெண்களுக்கு கை வலிமை ஜாஸ்தி. திருடனைக்கூட
அடிச்சே விரட்டிடுவாங்கன்னு. இருக்கும்!! அந்த உரல்
எவ்வளவு ஸ்ட்ராங்!!

மழைநீரை சேகரிச்சு கீழே கொண்டு வரும் தோணித்தகரம்,
முற்றம் இதெல்லாம் காட்டி அம்மா சொன்னப்ப அது
மாதிரி ஒரு வீடு கட்டலாம்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன்.