Monday, August 4, 2008

கார் பயணம் இனிதாக அமைய..

காரில் போகும்போது பாதுகாப்பு குறித்து பலரும்
யோசிப்பது இல்லை. மூடிய கதவுகள் என்றாலும்
காரிலும் அவதானமாக இருக்க வேண்டும்.காரின் ஓட்டுனரும், முன் இருக்கையில் அமர்பவரும்
கண்டிப்பாக ”சீட் பெல்ட்” அணிய வேண்டும்.
இது நமது நாட்டில் சட்டமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் அதிகம் பேர் பின்பற்றுவதில்லை.குறைந்த தூரமோ, குறைவான வேகமோ
கணக்கில்லை. சீட் பெல்ட் அணியாமல்
பயணம் செய்யாதீர்கள்.


ஹா, போட்டா என்ன? போடாட்டி என்ன?
என்று கேட்பவர்கள் இங்கே போய்
சீட் பெல்ட் போடாவிட்டால் என்ன ஆகும்
என்பதை பார்த்தீர்களானால் அந்த அனுபவத்தை
ரோடில் பெற விழைய மாட்டீர்கள்.
thinkseatbelts.comஇரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது
தலைக்கவசம் நமது உயிர் காக்கும்.

நம் உயிர் காக்கும் என்று தெரிந்தாலும்
பின்பற்றாமல் இருப்பது ஏனோ?

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்
பெண்களின் துப்பட்டா ஒன்றா காற்றில் பறக்கிறது,
இல்லையேல், சக்கரத்தில் மாட்டாமல் போவார்களா?
என்று கேள்வி எழுப்பும் விதத்தில் தொங்கிக்கொண்டு
போகிறது.

எத்தனை சம்பவங்கள்? எத்தனை விபத்துக்கள்?
தெரிந்தும் தெரியாத மாதிரி தலைக்கவசம்
அணியாமல் செல்கிறார்கள்.

எனது உறவினர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்தார்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச்
சென்றவர், நாய் குறுக்கே வர திருப்பிய
வேகத்தில் நிலைதவறி கீழே விழுந்து தலை
பாறையில் மோதியது.
ஒரு மாதக்காலம் கோமாவில் கிடந்து,
பத்தாவது படிக்கும் மகனையும், மனைவியையும்
விட்டுவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார்.

இருந்த பணம் அவரது மருத்துவமனை செலவுகளுக்கே
போய்விட்டது.


வண்டியில் அதிவேகமாக செல்வது
நீங்களே எமனை கால் போட்டு
கூப்பிடுவது மாதிரி.

தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது
நான் ரெடி நீ ரெடியா என்று எமனிடம் கேட்பது
போல்.

காரின் சீட் பெல்ட் போடாமல் பயணிப்பது
அடுத்த பயணம் எமனுடன் புஷ்பக விமானத்தில்
போகப்போகும் பயணத்தை உறுதி படுத்தும்.


தங்களின் நலம் விரும்பி.

9 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தங்களின் நலவிரும்பி ன்னா இப்பல்லாம் மொட்டக்கடுதாசி தான் நினைவுக்கு வருது.. ஆனா உண்மையில் கவனம் தேவை சரியா சொன்னீங்க..

இங்க ரிக்ஷால உக்காந்து போன பெண்ணோட துப்பட்டா கழுத்த நெரிச்சுடப்பார்த்திருக்க்கு..சக்கரத்தில் மாட்டிக்கிட்டு.... எந்நேரமும் எல்லா இடத்திலும் கவனம் கவனம்ன்னு சொல்லிட்டே இருக்கவேண்டியது தான்..

புதுகைத் தென்றல் said...

மொட்டக்கடுதாசியா!!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

கவனம் கவனம்ன்னு சொல்லிட்டே இருக்கவேண்டியது தான்..//

நாமதான் சொல்லிகிட்டே இருக்கோம்.
அப்படி போறவங்களைப் பார்த்து மனசு அடிச்சிக்கும்.

மங்களூர் சிவா said...

ம் சரியா சொன்னீங்க, எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் இந்த உணர்வு அவங்கவங்களுக்கே வரணும்.

சகாதேவன் said...

டிரைவிங் ஸ்கூல் எல்லாம் இப்போது ஒரு மாதத்தில் லைசென்ஸ் எடுத்து எடுத்து தருவதில்தான் இருக்கிறார்கள்.
சாலை விதிகளை கற்றுத் தருவதில்லை. என் "ப்ளெஷர் கார்" என்ற பதிவை பாருங்களேன்.
சகாதேவன்

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க சகாதேவன்,

நீங்க சொல்வதும் சரி.

உங்க பதிவை வந்து படிக்கிறேன்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அக்கா நான் சொன்னவுடன் இந்த பதிவை எழுதிய உங்களுக்கு என் நன்றி.என் நிலையைப் பார்த்தாவது இனி மற்றவர்கள் திருந்தட்டும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா

உங்களுக்காகத்தான் இந்தப் பதிவே போட்டேன்.