Monday, January 4, 2010

RECESSIONல் மாட்டிய ஒரு தெலுங்கு பிரம்மச்சாரியின் நிலை!!!!!

எந்த ஒரு அம்மாவுக்கும் வயது வந்த மகனுக்கு ஒரு
கால்கட்டு போட்டு, மாலையும் கழுத்துமாக பார்க்கும்
ஆசை உண்டு. ஆனா இப்ப இந்த ரெஷஷ்ன் வந்து
அந்த ஆசைக்கும் ஆப்பு வெக்குது.

பாவம் அம்மா கோவை சரளா தன் மகனைக் கல்யாணம்
செஞ்சுக்க சொல்லிக்கேட்க அந்த ரவணம்மாவின் மகன்
தான் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும் இந்த
பாடல் இப்போ சூப்பர் ஹிட்.

பம்பர் ஆஃபர் எனும் தெலுங்கு படத்தின் பாட்டு இது.
நோ தெலுகுன்னு சொல்றவங்க பாட்டின் அர்த்தம்
புரிஞ்சுக்க தமிழில் விளக்கமும் கொடுக்கறேன்.

ஆபீஸ்ல இப்ப இருந்தாலும் வீட்டுக்குபோயாவது
இந்த வீடியோவை பாத்திடுங்க. கோவை சரளா
டான்ஸ் சூப்பர். :)))



மஹாராணி ஸ்ரீ ரவணம்மாவுக்கு அவரது மகன்
சொல்லிக்கொள்வது என்னவென்றால் ரெஷஷனில்
பலருக்கு வேலை போய்விட்டது.
ரியல் எஸ்டேட் ஃபீல்ட் நொடிச்சு போச்சு,
சாஃப்டெ வேர் ஃபீல்ட் அடி வாங்கியிடுச்சு.

இதெல்லாம் பெரிய மனது செஞ்சு நீங்க புரிஞ்சுகிட்டு
என் கல்யாணத்தை நிறுத்தணும்.

அமெரிக்காவுலேர்ந்து நம்மாளுங்க எல்லாம்
பொட்டியை கட்டி திரும்ப வந்துகிட்டு இருக்காங்களாம்.
கட்ட பணம் இல்லாம காரை துபாய் ஏர்போர்டுலேயே
விட்டுட்டு வந்திடறாங்க.
உன் புருஷன் குமாஸ்தா, நானோ உபயோகமில்லாதவன்
இந்த நிலையில் கல்யாணம் செஞ்சுக்கத்தான் வேணுமா??

தான் நுழையவே சந்தில்லை. இதில் கழுத்துக்கு டோல்
தேவையா?

இப்படி இளைஞனின் இன்றைய நிலையைச் சொல்லும்
பாடல். வார்த்தைகள் புரியும். கொஞ்சம் கவனிச்சு
கேட்டுப்பாருங்க.

:))))

2 comments:

butterfly Surya said...

hahaha..பார்கிறேன்.

பகிர்விற்கு நன்றி.

pudugaithendral said...

பார்த்து எஞ்சாய் செய்ங்க சூர்யா