Monday, October 20, 2008

வந்தார்கள்!!!! கொன்றார்கள்

பரிசல்காரனின் இந்தப் பதிவைப் படித்ததும் இந்தப் பதிவை
போட்டே ஆகவேண்டுமென்று தோன்றியது.

விருந்தினர் போற்றுதல் நம் பண்பு. நமக்கு இல்லாவிட்டாலும்
விருந்தினருக்கு கொடுக்க வேண்டுமென்றெல்லாம்
சொல்லிவைத்திருக்கிறார்கள்.

நான் வளர்ந்தது அம்மம்மாவிடம். அம்மம்மாவின்
பாலிசி வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பாடு
கொடுத்தாக வேண்டும். குறைந்த பட்சமாக காபி/டீ
பிஸ்கட், முடிந்தால் டிபன், 1 மணி நேரமிருந்தால்
விருந்தே ஏற்பாடு செய்துவிடுவார். எனக்கும்
இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது.

திருமணத்திற்கு பிறகு அயித்தானின் வீட்டிலும்
இதே வழக்கம் என்பதால் விருந்தினர் போற்றுதல்
எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.

(விருந்தினராக இல்லாவிட்டாலும் பிளம்பர்
எலக்ட்ரீசியனுக்கு கூட டீ கொடுத்துதான்
அனுப்புவோம்)

அயித்தான் ஹிந்துஸ்தான் லீவரில் பணிபுரிந்த
போது “BEST HOSPITALITY’ விருது எனக்கு
கிடைத்தது.

இலங்கையில் இருந்த போதும் மாதம் 3 அல்லது
4 முறை நண்பர்களை அழைத்து விருந்து வைத்ததுண்டு.
அயித்தானின் எம்.டி, முதற்கொண்டு இந்தியாவிலிருந்து
யார்வந்தாலும் ஊருக்கு கிளம்பும் அன்று
என் கையால் விருந்து சாப்பிட்டுத்தான் கிளம்புவார்கள்.
இது அவர்களின் ஐடினரியில் எழுதப்படாத சட்டம்.
நான் மிகவும் விரும்பிய ஒன்று இது.

ஒரு நாள், அரைநாள் வந்து செல்லும் விருந்தினர்களால்
பிரச்சனை இருப்பதில்லை. 2 நாளுக்கு மேல் தங்குபவர்கள்
படுத்தும் பாடு அனைவரும் அறிந்ததே.

தன் வீட்டில் கிடைக்கும் சுகங்கள் சென்ற இடத்திலும்
கிடைக்க வேண்டுமென்று நினைப்பது,(உதாரணம்
24 மணி நேரமும் ஓடும் டீவி, மணிக்கொரு தரம்
காபி, இரவு படுக்கும் முன் பால், போர்ன்விடாதான்
வேண்டுமென்று இம்சை கொடுப்பது. இத்யாதிகள்.

அடுத்தவர் வீட்டிற்கு செல்லும்போது அந்தச் சூழ்நிலைக்கு
தகுந்தார்போல் தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ளத்
தெரியாதவர்கள் விருந்தினராகச் செல்லவே கூடாது.

இதைவிட கொடுமை விருந்தினரை ஊர் சுற்றிப்பார்க்க
அழைத்துச் செல்லுதல். அவர்களை ஊர் சுற்ற அழைத்துச்
சென்று பர்ஸ் காலியாகிவிடுமே என்று வீட்டிலும்
சமைக்க வேண்டும். வந்தவர்களோ கால் நீட்டி அமர்ந்து
என்ன வேண்டுமென மெனு சொல்வார்கள்.

அதே போல் அவர்கள் வீட்டிற்கு நாம் சென்றால்
என்னால் இதுதான் முடியும்? எங்க வீட்டுக்காரருக்கு
சீக்கரம் தூங்கவேண்டும், டீவியை ஆஃப் செஞ்சுடறேன்
என்று சொல்வார்கள் :(

இது பலரின் அனுபவம். இப்படி இருக்கையில் எங்கே
விருந்தினர் போற்றுதும்.

1. விருந்தினர் வருகையை எப்படி சமாளிப்பீர்கள்?

2. விருந்தினராக செல்லும்போது நாம் பின்பற்ற வேண்டிய
நற்குணங்கள் எவை?

3. நம்மை கேட்காமல் ஃபிரிஜிலிர்ந்து எடுத்து திண்ணும்
விருந்தினரை என்ன செய்யலாம்?

4. விருந்தினராக தங்க வருபவரிடம் நீங்கள் என்ன
எதிர் பார்ப்பீர்கள்?

5. விருந்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று
எதிர் பார்ப்பீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கு பதிலாக பதிவுபோட்டு டேக்
செய்ய நான் அழைப்பது

பரிசல்காரன்

முத்துலட்சும்

7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திருவிளையாடல் நாகேஷா நீங்க?
கேள்வி மட்டும் தான் கேப்பீங்களா?
அப்ப நாங்களும் கேள்வியே கேட்டுருவோம்.. நீங்க மட்டும் பதில் சொல்லாம டிமிக்கியா.. தென்றல் டவுன் டவுன்.பதில் போட்டுட்டு சொல்லுங்க ..அப்பத்தான் டேக்.. எங்கள மட்டும் மாட்டிவிட திட்டமா...:)

pudugaithendral said...

இப்பல்லாம் சர்வேசன் சார் சர்வே எடுப்பதில்லை பாருங்க. அதான் நான் ஆரம்பித்திருக்கிறேன்.

இது சர்வே எடுக்கும் பதிவு முத்துலெட்சுமி.

pudugaithendral said...

சர்வேச்வரின்னு பட்டம் கொடுத்துப்புடாதீங்க ஆத்தா :(

(பட்டம் கொடுக்கறதுக்குன்னு உக்காந்து யோசிப்பீங்களோ!!!)

பரிசல்காரன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

திருவிளையாடல் நாகேஷா நீங்க?
கேள்வி மட்டும் தான் கேப்பீங்களா?
அப்ப நாங்களும் கேள்வியே கேட்டுருவோம்.. நீங்க மட்டும் பதில் சொல்லாம டிமிக்கியா.. தென்றல் டவுன் டவுன்.பதில் போட்டுட்டு சொல்லுங்க ..அப்பத்தான் டேக்.. எங்கள மட்டும் மாட்டிவிட திட்டமா...:)//

டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

என்னது ஹைதராபாத் வந்தா ராத்திரி ஹார்லிக்ஸ் கிடையாதா?? என்ன கொடுமை பூங்கொடி இது

:)))))))))))))))))))))))

pudugaithendral said...

வாங்க புகழன்,

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

காலேல கார்ன்ப்ளேக்ஸ், ராத்திரி
ஹார்லிக்ஸ்.


வரும்போது நல்ல கறவை மாடா

ஒண்ணு பிடிச்சுகிட்டு வாங்க தம்பி.

:)))))))))))))