Thursday, November 29, 2007

எங்களுக்குப் பிடித்த ரயில் பயணம்

நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையின் போது இந்தியா வருவோம். அம்மா, அப்பா முன்னதாகவே திட்டமிடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஊருக்கு அழைத்துச் செல்வார்கள். (இந்தியாவை விட்டு வெளியே இருப்பதால் நம் நாட்டை குறித்து அறிந்து
கொள்ளுவதற்காக). அப்படி செல்லும் போது தவறாமல் டிரெயினில் போக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். கண்டிப்பாக அழைத்துச் செல்வார்கள்.

நாங்கள் மிகவும் விரும்புவது அந்த ரயில் பயணம். பெரும்பாலும் a/c coach ல் தான் போயிருக்கிறோம் என்றாலும், எங்களுக்குத் தெரிய வேண்டும்
என்பதற்காக 2nd class sleeper coach லும் கூட அப்பா அழைத்துச் சென்றிருக்கிறார்.

சென்னை - பெங்களூர் சதாப்தி டிரெயின் பயணம் மிக நன்றாக இருந்தது.

சிங்கப்பூர், மலேசியா போயிருந்தபோது, சிங்கப்பூர் - மலேசியா டிரெயினில் சென்றோம். அது அவ்வளவு நன்றாக இல்லை.

நம் ஊரில் 3 + 3 + side berths இருக்கும் தானே? ஆனால் அந்த டிரெயினில் எல்லாமே side lower and side upper birth தான்.
முழுதும் குளிருட்டப்பட்டு இருந்தாலும், side lower ticket rate அதிகம்.
side upper ticket விலை குறைவு.

எங்களுக்கு பிடித்தது நம் இந்திய ரயில் தான்.


WE LOVE INDIA.

10 comments:

Baby Pavan said...

சூப்பர், எந்த ஊர்ல இருக்கீங்க... வாங்க சேர்ந்து கலக்கலாம்

Baby Pavan said...

contact us @ babypavan@gmail.com

ஆஷ் அம்ருதா said...

ஹாய் பவன்

நாங்க ரெடி. கலக்கிடலாம்.

ஆஷ் அம்ருதா said...
This comment has been removed by the author.
MyFriend said...

அம்மாவும் அப்ப்பாவூம் ரயில் பயணாங்கள்ள் ரசிகளோ? ஆதான் உங்க ரெண்டு பேரைய்யும் நிறைய ரயிலில் பயணத்துக்கு அழைச்சு போயிருக்காங்க போல. ;-)

ரசிகன் said...

அடுத்த மொறை இந்தியா போகும்போது .. ரசிகன் அங்கிள் வீட்டையும் போய் பாத்துட்டு வாம்மா...

அன்புடன் ரசிகன்

ஆஷ் அம்ருதா said...

ரசிகன்

//அடுத்த மொறை இந்தியா போகும்போது .. ரசிகன் அங்கிள் வீட்டையும் போய் பாத்துட்டு வாம்மா... //

எங்களுக்கும் டிரெயின் ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்ருதாவிற்கு a/c coach ரொம்ப பிடிக்கும்.

அங்கிள் உங்க ஊர் எதுன்னு சொல்லுங்க போய் பார்க்கறோம்

ரசிகன் said...

இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் இப்படியெல்லாம் நினைத்துப்பார்த்து சந்தோஷம்பட சின்ன வயசில ஒரு குறும்புக்கார தங்கை இல்லியேன்னு வருத்தமாயிருக்கு குட்டீஸ்..

ரசிகன் said...

ஆஹா.. அங்க்கிள் ஊரு இம்புட்டு நாள் தெரியாதா?
வான் புகழ்(சொம்மா ஒரு பில்டப்புத்தேன்..ஹிஹி...)பெற்ற பாண்டிச்சேரிதேன்..

ஆஷ் அம்ருதா said...

ஏற்கனவே பார்த்த ஊர்னாலும் உங்களுக்காக மறுபடி பார்க்கறாங்கலாம்.

புள்ளைங்களுக்காக பிராக்ஸி போட்டது அவங்க அம்மா.