Monday, June 29, 2009

நாங்க செஞ்சது.

எங்களுக்கு லீவு விட்டிருந்த போது நடந்தது இது.
எங்களூக்கு ரொம்ப பிடிக்கும்னு அம்மா
சன்னா செஞ்சு வெச்சிருந்தாங்க. இரவு டிபனுக்கு
சூடா பூரி இல்லாட்டி சப்பாத்தி செஞ்சு சன்னாவை
சூடு செஞ்சிட்டா டின்னர் ரெடின்னு அம்மா
ப்ளான் போட்டு வெச்சிருந்தாங்க.

அன்னைக்கு அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம
போயிடிச்சு. பயங்கர தலைவலி அம்மாவுக்கு.
”ராத்திரி சாப்பாடு வெளியிலேர்ந்து கொண்டு
வரலாம்னு அப்பா சொன்னாங்க”.

அம்மா செஞ்சு வெச்சிருக்கற சன்னாவை விட
மனசில்லை. :))))

அப்பாவை மாவு பிசைஞ்சு கொடுத்து சொல்லி
பக்கத்துலே நிக்கச் சொன்னோம்.

அம்ருதா பூரி ஒத்திகொடுக்க...



நான் அதை எண்ணையில் போட்டு எடுத்தேன்.
அப்பா தான் செய்வதா சொல்லியும் நாங்க
விடலை. அம்மாதான் எங்களுக்கு சொல்லிக்
கொடுத்திருக்காங்களே!!



இரவு சுடச்சுட பூரி + சன்னா ரெடியாகிடிச்சு.
அம்மா செய்வது போல அப்பா வட்ட வட்டமா
வெங்காயத்தை வெட்டி தட்டில வெச்சு அமர்க்களமா
டேபிள் செட் செஞ்சாங்க.


இதுவரைக்கும் தோசை & காபி எக்ஸபர்டா இருந்த
நான் பூரி எக்ஸ்பர்டாகவும், சப்பாத்தி எக்ஸ்பர்டா
இருந்த அம்ருதா பூரி மாஸ்டராகவும்
மாறிட்டோமே.

அம்மா, அப்பா ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
அம்மா,அப்பாவுக்கு உதவியதுல எங்களுக்கும்
சந்தோஷம்.

ஆஷிஷ்

16 comments:

Iyappan Krishnan said...

கங்க்ராட்ஸ் மருமக்களே :) இப்படித்தான் இருக்கனும்.

ராமலக்ஷ்மி said...

எங்களுக்கும் சந்தோஷம்:)!

நானானி said...

ரொம்ப சந்தோசம் செல்லங்களா!

இன்னும் கத்துக்கிட்டு அசத்துங்க.

Ungalranga said...

ஆஹா..

எனக்கு???

சென்ஷி said...

:)))

அபி அப்பா said...

பார்த்த உடனே பசிக்குதே கண்ணுங்களா:-))

ஆயில்யன் said...

பூரி :)))))))))

எனக்கு!
எனக்கு!!

ஆயில்யன் said...

வலைப்பூ ஆரம்பிக்கிறாங்க!

பூரி சுடறாங்க!!

இதையெல்லாம் பார்த்தா ஒரு வேளை அம்மாவை விட நாம இன்னும் பெட்டரா பண்ணமுடியும்ங்கற நம்பிக்கை வந்திருச்சோ குட்டீஸ்க்கு :))))))))))

(இது தமாசு!)

ஆஷிஷ் அம்ருதா said...

அப்படியே செய்யறோம் ஜீவ்ஸ் அங்கிள்

ஆஷிஷ் அம்ருதா said...

தாங்கஸ் ராமலக்‌ஷ்மி ஆண்டி

ஆஷிஷ் அம்ருதா said...

இன்னும் கத்துக்கிட்டு அசத்துங்க.//

கண்டிப்பா கத்துகிட்டு பதிவு போட்டு அசத்தறோம்.

ஆஷிஷ் அம்ருதா said...

எனக்கு???//

ஹைதைக்கு வந்தால் உங்களுக்கும் :))

ஆஷிஷ் அம்ருதா said...

ஸ்மைலிக்கு தாங்கஸ் சென்ஷி அங்கிள்

ஆஷிஷ் அம்ருதா said...

பார்த்த உடனே பசிக்குதே கண்ணுங்களா//

இங்க வாங்க கண்டிப்பா செஞ்சு கொடுக்கறோம்.

ஆஷிஷ் அம்ருதா said...

இதையெல்லாம் பார்த்தா ஒரு வேளை அம்மாவை விட நாம இன்னும் பெட்டரா பண்ணமுடியும்ங்கற நம்பிக்கை வந்திருச்சோ குட்டீஸ்க்கு //

அம்மா மாதிரி செய்ய நாங்களும் பழகணும்ல ஆயில்ஸ் அங்கிள்

மணிநரேன் said...

அடடே..கலக்கறீங்களே.
மிக்க மகிழ்ச்சி. :)