எனது ஆடி அமாவாசை சிறப்பு பதிவுக்கு வந்து அம்பி போட்ட பின்னூட்டத்திற்கு
எல்லோரும் ரிப்பீட்டு ரிப்பீட்டுன்னு மறுக்கா கூவிக்கினே இருந்தாங்க.
கேட்டுட்டாங்க. அதான் நானே செஞ்சு கொடுத்திடலாம்னு.
சீக்கிரமா எந்திரிச்சாலும் (அதிகாலை 3 மணிக்கு எந்திரிச்சேன் )
மத்த வேலைகளுக்கு இடையே
கொஞ்சமாத்தான் செய்ய முடிஞ்சது.
அம்பி, அப்துல்லா, நிஜமா நல்லவன், புது வண்டு ,
காரக்கொழுட்டையைப் பத்தி கேட்ட கயல்விழி
உங்க எல்லோருக்காகவும் இதோ..
தேங்காய்ப்பூரண கொழுக்கட்டை,
ஏரோப்ளேன் கொழுக்கட்டை,
காரக் கொழுக்கட்டை.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ஓ இதான் ஏரோப்ளேன் கொழுக்கட்டையா... நல்லா இருக்கே.. பறந்தே வாய்க்குள்ள போகுமோ...
டேஸ்ட் அபாரம்:-)))))
ஆஹா :)))
அக்கா அசத்திட்டீங்க முடிஞ்சா அந்த கொஞ்சம் கொழுக்கட்டையில ஒரு ரெண்டு அனுப்பி வைக்கலாமே! :)
வாங்க கயல்விழி,
சின்ன பிள்ளையாய் இருக்கும்போது அந்தக் கொழுக்கட்டையை அப்படித்தான் ஜொய்ய்யின்ன் சத்தத்தோடு வாயில் போட்டுக்கொள்வோம்.
:)
ஆஹா அக்கா! பாசக்கார அக்கா தான். ரொம்ப நன்றி!நன்றி!
உப்பு காரம், திதிப்பு சரியா இருந்திச்சான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.
டீச்சரே சொல்லிட்டாங்களே. நன்றி துளசி அக்கா.
ஆஹா ஆயில்யன்,
நீங்களும் என் தோழியின் மகள் மாதிரி கேக்கறீங்களே! :)
என் தோழி இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு மாற்றலாகி போய் 1 மாதத்தில் போன் செய்தார். அவரது பெரிய மகளுக்கு நான் வைக்கும் அப்பளம் போட்ட வெந்தயக்குழம்பு ரொம்ப பிடிக்கும்.
ஆண்ட்டி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் காரங்கள்ட்டயாவது கொடுத்தனுப்புங்கள் என்பாள்.
அந்த ஏரோபிளேன் கொழுக்கட்டை...ஆஹா அதுக்காக ஏரோபிளேன் பிடிச்சு ஹைதராபாத்துக்கு அக்கா வீட்டுக்கு போயிருக்கலாம்.
நிஜமா நல்லவன் said...
ஆஹா அக்கா! பாசக்கார அக்கா தான்.
//
மறுக்கா கூவு
நான் வைக்கும் அப்பளம் போட்ட வெந்தயக்குழம்பு //
அண்ணிக்கிட்ட இதுக்கு ரெசிப்பி போட சொல்லுங்கனு தங்கமணி சொல்லுச்சு.
//சீக்கிரமா எந்திரிச்சாலும் (அதிகாலை 3 மணிக்கு எந்திரிச்சேன் )
//
ஸ்ப்ப்பா, இப்பவே கண்ண கட்டுதே! 3 மணி எல்லாம் எனக்கு நடு இரவு. ரொம்ப சின்சியர் நீங்க.
ம்ம், கொழுகட்டைஸ் எல்லாம் நல்லா இருக்கு. :)
பொறுப்பா போட்டோ எடுத்து போட்டு இருக்கீங்க பாருங்க, அதுக்கே ஒரு தனி பாராட்டு.
எனக்கு வீட்டு ஞாபகம் வந்திருச்சு ....
/
முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஓ இதான் ஏரோப்ளேன் கொழுக்கட்டையா... நல்லா இருக்கே.. பறந்தே வாய்க்குள்ள போகுமோ...
/
repeatey.....
ஏரொப்ளேன் கொழுக்கட்டை பாக்கவே நல்லா இருக்கு. பூரணம் லட்டு மாதிரி உருட்டி வேற வைச்சிருக்கீங்க. கொழுக்கட்டையா வேண்டாம் பூரணமாகவே குடுத்திருங்க.
அக்கா அக்கானு வாய்நிறைய பாசத்தோட கூப்பிடும்போது நானும் பாசக்கார அக்காவாத்தானே இருக்கணும் நிஜமா நல்லவன்.
ஹைதராபாத்துக்கு வாங்கன்னு கூப்பிட்டேன் வரல் அதான் பதிவுல அனுபிட்டேன் ஏரோப்ளேனே.
சீக்கிரமா வெந்தயக் குழம்பு பதிவு போடுறேன்னு சொல்லிடுங்க.
வாங்க அம்பி,
பிள்ளைகள் 6.50க்கு பள்ளிக்கு கிளம்புவதற்கு முன் பூஜை செய்யவேண்டுமென்றால் 3 மணிக்கு எழும்பத்தானே வேண்டும்.
பண்டிகைகள், பூஜைகள் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும்,பழக வேண்டும் என்பது என் எண்ணம்.
தங்களின் பாராட்டுக்கு நன்றி.
ஆஹா மொத தபா வரும்போதே ஃபீலிங்கோடு வர்றீங்களே
மீன் துள்ளீயான்.
me the firstu போடும் சிவா இன்னிக்கு லேட்டா வந்து ரிப்பீட்டு போடுவது புதுமையிலும் புதுமை.
வாங்க சின்ன அம்மிணி,
உருட்டி வெச்சது பூரணம் இல்ல.
கொழுக்கட்டையின் மாவில், சாம்பார் பொடி, உப்பு, சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி செய்யும், மணிக்கொழுக்கட்டை அல்லது காரக் கொழுக்கட்டையாக்கும்.
Post a Comment