பரிசல்காரனின் இந்தப் பதிவைப் படித்ததும் இந்தப் பதிவை
போட்டே ஆகவேண்டுமென்று தோன்றியது.
விருந்தினர் போற்றுதல் நம் பண்பு. நமக்கு இல்லாவிட்டாலும்
விருந்தினருக்கு கொடுக்க வேண்டுமென்றெல்லாம்
சொல்லிவைத்திருக்கிறார்கள்.
நான் வளர்ந்தது அம்மம்மாவிடம். அம்மம்மாவின்
பாலிசி வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பாடு
கொடுத்தாக வேண்டும். குறைந்த பட்சமாக காபி/டீ
பிஸ்கட், முடிந்தால் டிபன், 1 மணி நேரமிருந்தால்
விருந்தே ஏற்பாடு செய்துவிடுவார். எனக்கும்
இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது.
திருமணத்திற்கு பிறகு அயித்தானின் வீட்டிலும்
இதே வழக்கம் என்பதால் விருந்தினர் போற்றுதல்
எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.
(விருந்தினராக இல்லாவிட்டாலும் பிளம்பர்
எலக்ட்ரீசியனுக்கு கூட டீ கொடுத்துதான்
அனுப்புவோம்)
அயித்தான் ஹிந்துஸ்தான் லீவரில் பணிபுரிந்த
போது “BEST HOSPITALITY’ விருது எனக்கு
கிடைத்தது.
இலங்கையில் இருந்த போதும் மாதம் 3 அல்லது
4 முறை நண்பர்களை அழைத்து விருந்து வைத்ததுண்டு.
அயித்தானின் எம்.டி, முதற்கொண்டு இந்தியாவிலிருந்து
யார்வந்தாலும் ஊருக்கு கிளம்பும் அன்று
என் கையால் விருந்து சாப்பிட்டுத்தான் கிளம்புவார்கள்.
இது அவர்களின் ஐடினரியில் எழுதப்படாத சட்டம்.
நான் மிகவும் விரும்பிய ஒன்று இது.
ஒரு நாள், அரைநாள் வந்து செல்லும் விருந்தினர்களால்
பிரச்சனை இருப்பதில்லை. 2 நாளுக்கு மேல் தங்குபவர்கள்
படுத்தும் பாடு அனைவரும் அறிந்ததே.
தன் வீட்டில் கிடைக்கும் சுகங்கள் சென்ற இடத்திலும்
கிடைக்க வேண்டுமென்று நினைப்பது,(உதாரணம்
24 மணி நேரமும் ஓடும் டீவி, மணிக்கொரு தரம்
காபி, இரவு படுக்கும் முன் பால், போர்ன்விடாதான்
வேண்டுமென்று இம்சை கொடுப்பது. இத்யாதிகள்.
அடுத்தவர் வீட்டிற்கு செல்லும்போது அந்தச் சூழ்நிலைக்கு
தகுந்தார்போல் தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ளத்
தெரியாதவர்கள் விருந்தினராகச் செல்லவே கூடாது.
இதைவிட கொடுமை விருந்தினரை ஊர் சுற்றிப்பார்க்க
அழைத்துச் செல்லுதல். அவர்களை ஊர் சுற்ற அழைத்துச்
சென்று பர்ஸ் காலியாகிவிடுமே என்று வீட்டிலும்
சமைக்க வேண்டும். வந்தவர்களோ கால் நீட்டி அமர்ந்து
என்ன வேண்டுமென மெனு சொல்வார்கள்.
அதே போல் அவர்கள் வீட்டிற்கு நாம் சென்றால்
என்னால் இதுதான் முடியும்? எங்க வீட்டுக்காரருக்கு
சீக்கரம் தூங்கவேண்டும், டீவியை ஆஃப் செஞ்சுடறேன்
என்று சொல்வார்கள் :(
இது பலரின் அனுபவம். இப்படி இருக்கையில் எங்கே
விருந்தினர் போற்றுதும்.
1. விருந்தினர் வருகையை எப்படி சமாளிப்பீர்கள்?
2. விருந்தினராக செல்லும்போது நாம் பின்பற்ற வேண்டிய
நற்குணங்கள் எவை?
3. நம்மை கேட்காமல் ஃபிரிஜிலிர்ந்து எடுத்து திண்ணும்
விருந்தினரை என்ன செய்யலாம்?
4. விருந்தினராக தங்க வருபவரிடம் நீங்கள் என்ன
எதிர் பார்ப்பீர்கள்?
5. விருந்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று
எதிர் பார்ப்பீர்கள்?
இந்தக் கேள்விகளுக்கு பதிலாக பதிவுபோட்டு டேக்
செய்ய நான் அழைப்பது
பரிசல்காரன்
முத்துலட்சும்
Monday, October 20, 2008
India Aviation show
A 380 ரக விமானம் ஹைதராபாத் வரப்போகிறது இதுதான்ஏவியேஷன் ஷோவின் ஹைலைட்டாக இருந்தது. பேகம் பேட்ஏர்போர்டில் தான் இந்தக் கொண்டாட்டம். பொதுமக்களையும்பார்க்க அனுமதிக்கிறார்கள் என்பதால் போகவேண்டும்என்று திட்டம் தீட்டி (!!!) வைத்திருந்தோம்.என்னிடம் கேட்காமலேயே அந்த விமானத்தைபிரான்சுக்கு கொண்டு சென்று விட்டார்கள். :(
320 ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தான் இருக்கின்றனஎன்றாலும் பிள்ளைகளுக்காக போனோம். நாங்கள் சென்றபோது கூட்டம் குறைவுதான். அதற்குபிறகு சரி கூட்டம் வந்து சமாளிக்க முடியாமல் போய், டிக்கெட்கொடுக்க மறுத்துவிட்டார்களாம்.பேகம்பேட்டைச் சுற்றி இருந்த ஏரியாக்கள் டிராபிக்ல்தத்தளித்தது. ஆமை வேகம் கூட இல்லாமல் வண்டிகள்அங்கங்கே நின்று கொண்டிருந்தனவாம்.(கீழே உள்ள படத்தில் இருப்பது கண்காட்சி அரங்கும்மக்களும்(கண்ணாடியில் பிரதபலித்ததை எடுத்தோம்))
விமான நிலையத்தில் இருக்கும் அயித்தானின் நண்பர் எச்சரித்திருந்ததால்காலை 9.30 மணிக்கு போனோம். டிக்கட் (ஒருவருக்கு 150 ரூபாய்)வாங்கிக்கொண்டு உள்ளே போனோம்.ஏர் இந்தியா மற்றும் கிங்ஃபிஷர் விமானம் 2 நின்று கொண்டிருந்தது.சில ஹெலிகாப்டர்கள் இருந்தன.ஆனால் இவைகளை விட கண்காட்சி மிக நன்றாக இருந்தது.மினியேச்சர் ஹெலிகாப்டர்கள், போயிங், ஏர்பஸ் (இவை இரண்டும்தான் விமான தயாரிப்பு கம்பெனிகள்) மாடல்கள், எனஅருமையாக இருந்தது. காக்பீட்டினுள் எப்படி இருக்கும் என்பதை ஷோவாக காட்டிக்கொண்டிருந்தார்கள்அனுமார் வாலைவிட பெரிய வரிசை இருந்ததால் போகவில்லை.
மேலும் சில புகைப்படங்களுக்கு
இங்கே ஆஷிஷ்.
அம்ருதா.பிளாக்கில்.
மேலும் சில புகைப்படங்களுக்கு
இங்கே ஆஷிஷ்.
அம்ருதா.பிளாக்கில்.
Monday, September 1, 2008
விநாயக வந்தனம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே.

எங்கள் குரலில்:
| ajam nirvikalpam.m... |
அஜம் நிர்விகல்பம் நிராகார மேகம்
நிரானந்த மானந்த அத்வைத பூர்ணம்
பரம் நிர்குணம் நிர்விஷேஷம் நிதேகம்
பரப்ரம்மஹ ரூபம் கணேஷம் பஜேமா.
கணேஷம் பஜேமா.
குணாதீத மானம் சிதானந்த ரூபம்
சிதாபாஷகம் சர்வகம் ஞானகம்யம்
முனித்யேய மாதாசொரூபம் பரேஷம்
பரப்ரம்மஹ ரூபம் கணேஷம் பஜேமா.
கணேஷம் பஜேமா.
ஜகத் காரணம் காரணக்யான ரூபம்
சுராதிம் சுகாதிம் குணேஷம் கணேஷம்
ஜகத் வியாபினம் விஷ்வ வந்தயம்
சுரேஷம் பரப்ரம்மஹ ரூபம் கணேஷம் பஜேமா.
கணேஷம் பஜேமா.
யூ ட்யூபில் பார்க்க.
Friday, August 22, 2008
Monday, August 4, 2008
தமிழ் சமையல் இவ்வாரத்திட்டம்- இனிப்பு
இவ்வாரத்திட்டம் இனிப்பிற்காக என் பதிவு.
இது போளி. பொப்பட்லு தெலுங்கு, உப்பட்லு கன்னடம்,
பூரண் போளி - மராதி.
எங்களது தெலுங்கு வருடப்பிறப்பன்று கட்டாயம்
செய்யப்படவேண்டிய இனிப்பு.
தேவையான பொருட்கள்:
மைதா- 1 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ரீஃபைண்ட் ஆயில், தண்ணீர் இரண்டும்
சம அளவு (தனித்தனி டம்பளரில் இரண்டும்
ஒரே அளவு இருக்க வேண்டும்)
உப்பு கொஞ்சம்,
மஞ்சள் தூள் 1 சிட்டிகை.
தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை:
மேல்மாவு தயாரிக்க:
மைதாமாவில் மஞ்சள், உப்பு சேர்த்து
ஒருமுறை எண்ணைய், ஒருமுறை தண்ணீர்
என்ற விகிதத்தில் சேர்த்து சப்பாத்தி மாவு
பதத்தில் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பூரணம் செய்ய:
கடலைப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
ஆறியதும் சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில்
ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.
கடாயில் நெய் கொஞ்சம் விட்டு,
தேங்காய்த்துருவல், அரைத்து வைத்துள்ள
பருப்பு கலவை எல்லாம் போட்டு சுருள்
வதக்கி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல்
வந்ததும் இறக்கி வைக்கவும்.

மேல்மாவில் கொஞ்சம் எடுத்து சப்பாத்தி போல்
செய்து நடுவில் பூரணம் வைக்கவும்.

பூரணத்தை நடுவில் வைத்து மூடி
கொஞ்சம் கையால் தட்டி
அடுப்பில் இருபக்கமும் சுட்டு எடுக்கவும்.
சுடும்பொழுது எண்ணைய் விட தேவையில்லை.
மாவில் இருக்கும் எண்ணையே போதும்.
இது போளி. பொப்பட்லு தெலுங்கு, உப்பட்லு கன்னடம்,
பூரண் போளி - மராதி.
எங்களது தெலுங்கு வருடப்பிறப்பன்று கட்டாயம்
செய்யப்படவேண்டிய இனிப்பு.
தேவையான பொருட்கள்:
மைதா- 1 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ரீஃபைண்ட் ஆயில், தண்ணீர் இரண்டும்
சம அளவு (தனித்தனி டம்பளரில் இரண்டும்
ஒரே அளவு இருக்க வேண்டும்)
உப்பு கொஞ்சம்,
மஞ்சள் தூள் 1 சிட்டிகை.
தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை:
மேல்மாவு தயாரிக்க:
மைதாமாவில் மஞ்சள், உப்பு சேர்த்து
ஒருமுறை எண்ணைய், ஒருமுறை தண்ணீர்
என்ற விகிதத்தில் சேர்த்து சப்பாத்தி மாவு
பதத்தில் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பூரணம் செய்ய:
கடலைப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
ஆறியதும் சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில்
ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.
கடாயில் நெய் கொஞ்சம் விட்டு,
தேங்காய்த்துருவல், அரைத்து வைத்துள்ள
பருப்பு கலவை எல்லாம் போட்டு சுருள்
வதக்கி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல்
வந்ததும் இறக்கி வைக்கவும்.
மேல்மாவில் கொஞ்சம் எடுத்து சப்பாத்தி போல்
செய்து நடுவில் பூரணம் வைக்கவும்.

பூரணத்தை நடுவில் வைத்து மூடி
கொஞ்சம் கையால் தட்டி
அடுப்பில் இருபக்கமும் சுட்டு எடுக்கவும்.
சுடும்பொழுது எண்ணைய் விட தேவையில்லை.
மாவில் இருக்கும் எண்ணையே போதும்.
கார் பயணம் இனிதாக அமைய..
காரில் போகும்போது பாதுகாப்பு குறித்து பலரும்
யோசிப்பது இல்லை. மூடிய கதவுகள் என்றாலும்
காரிலும் அவதானமாக இருக்க வேண்டும்.
காரின் ஓட்டுனரும், முன் இருக்கையில் அமர்பவரும்
கண்டிப்பாக ”சீட் பெல்ட்” அணிய வேண்டும்.
இது நமது நாட்டில் சட்டமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் அதிகம் பேர் பின்பற்றுவதில்லை.
குறைந்த தூரமோ, குறைவான வேகமோ
கணக்கில்லை. சீட் பெல்ட் அணியாமல்
பயணம் செய்யாதீர்கள்.
ஹா, போட்டா என்ன? போடாட்டி என்ன?
என்று கேட்பவர்கள் இங்கே போய்
சீட் பெல்ட் போடாவிட்டால் என்ன ஆகும்
என்பதை பார்த்தீர்களானால் அந்த அனுபவத்தை
ரோடில் பெற விழைய மாட்டீர்கள்.
thinkseatbelts.com
இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது
தலைக்கவசம் நமது உயிர் காக்கும்.
நம் உயிர் காக்கும் என்று தெரிந்தாலும்
பின்பற்றாமல் இருப்பது ஏனோ?
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்
பெண்களின் துப்பட்டா ஒன்றா காற்றில் பறக்கிறது,
இல்லையேல், சக்கரத்தில் மாட்டாமல் போவார்களா?
என்று கேள்வி எழுப்பும் விதத்தில் தொங்கிக்கொண்டு
போகிறது.
எத்தனை சம்பவங்கள்? எத்தனை விபத்துக்கள்?
தெரிந்தும் தெரியாத மாதிரி தலைக்கவசம்
அணியாமல் செல்கிறார்கள்.
எனது உறவினர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்தார்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச்
சென்றவர், நாய் குறுக்கே வர திருப்பிய
வேகத்தில் நிலைதவறி கீழே விழுந்து தலை
பாறையில் மோதியது.
ஒரு மாதக்காலம் கோமாவில் கிடந்து,
பத்தாவது படிக்கும் மகனையும், மனைவியையும்
விட்டுவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார்.
இருந்த பணம் அவரது மருத்துவமனை செலவுகளுக்கே
போய்விட்டது.
வண்டியில் அதிவேகமாக செல்வது
நீங்களே எமனை கால் போட்டு
கூப்பிடுவது மாதிரி.
தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது
நான் ரெடி நீ ரெடியா என்று எமனிடம் கேட்பது
போல்.
காரின் சீட் பெல்ட் போடாமல் பயணிப்பது
அடுத்த பயணம் எமனுடன் புஷ்பக விமானத்தில்
போகப்போகும் பயணத்தை உறுதி படுத்தும்.
தங்களின் நலம் விரும்பி.
யோசிப்பது இல்லை. மூடிய கதவுகள் என்றாலும்
காரிலும் அவதானமாக இருக்க வேண்டும்.
காரின் ஓட்டுனரும், முன் இருக்கையில் அமர்பவரும்
கண்டிப்பாக ”சீட் பெல்ட்” அணிய வேண்டும்.
இது நமது நாட்டில் சட்டமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் அதிகம் பேர் பின்பற்றுவதில்லை.
குறைந்த தூரமோ, குறைவான வேகமோ
கணக்கில்லை. சீட் பெல்ட் அணியாமல்
பயணம் செய்யாதீர்கள்.
ஹா, போட்டா என்ன? போடாட்டி என்ன?
என்று கேட்பவர்கள் இங்கே போய்
சீட் பெல்ட் போடாவிட்டால் என்ன ஆகும்
என்பதை பார்த்தீர்களானால் அந்த அனுபவத்தை
ரோடில் பெற விழைய மாட்டீர்கள்.
thinkseatbelts.com
இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது
தலைக்கவசம் நமது உயிர் காக்கும்.
நம் உயிர் காக்கும் என்று தெரிந்தாலும்
பின்பற்றாமல் இருப்பது ஏனோ?
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்
பெண்களின் துப்பட்டா ஒன்றா காற்றில் பறக்கிறது,
இல்லையேல், சக்கரத்தில் மாட்டாமல் போவார்களா?
என்று கேள்வி எழுப்பும் விதத்தில் தொங்கிக்கொண்டு
போகிறது.
எத்தனை சம்பவங்கள்? எத்தனை விபத்துக்கள்?
தெரிந்தும் தெரியாத மாதிரி தலைக்கவசம்
அணியாமல் செல்கிறார்கள்.
எனது உறவினர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்தார்.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச்
சென்றவர், நாய் குறுக்கே வர திருப்பிய
வேகத்தில் நிலைதவறி கீழே விழுந்து தலை
பாறையில் மோதியது.
ஒரு மாதக்காலம் கோமாவில் கிடந்து,
பத்தாவது படிக்கும் மகனையும், மனைவியையும்
விட்டுவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார்.
இருந்த பணம் அவரது மருத்துவமனை செலவுகளுக்கே
போய்விட்டது.
வண்டியில் அதிவேகமாக செல்வது
நீங்களே எமனை கால் போட்டு
கூப்பிடுவது மாதிரி.
தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது
நான் ரெடி நீ ரெடியா என்று எமனிடம் கேட்பது
போல்.
காரின் சீட் பெல்ட் போடாமல் பயணிப்பது
அடுத்த பயணம் எமனுடன் புஷ்பக விமானத்தில்
போகப்போகும் பயணத்தை உறுதி படுத்தும்.
தங்களின் நலம் விரும்பி.
Saturday, August 2, 2008
HAPPY BIRTHDAY SUREKA
Subscribe to:
Posts (Atom)

