Monday, October 20, 2008

India Aviation show

A 380 ரக விமானம் ஹைதராபாத் வரப்போகிறது இதுதான்ஏவியேஷன் ஷோவின் ஹைலைட்டாக இருந்தது. பேகம் பேட்ஏர்போர்டில் தான் இந்தக் கொண்டாட்டம். பொதுமக்களையும்பார்க்க அனுமதிக்கிறார்கள் என்பதால் போகவேண்டும்என்று திட்டம் தீட்டி (!!!) வைத்திருந்தோம்.என்னிடம் கேட்காமலேயே அந்த விமானத்தைபிரான்சுக்கு கொண்டு சென்று விட்டார்கள். :(320 ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தான் இருக்கின்றனஎன்றாலும் பிள்ளைகளுக்காக போனோம். நாங்கள் சென்றபோது கூட்டம் குறைவுதான். அதற்குபிறகு சரி கூட்டம் வந்து சமாளிக்க முடியாமல் போய், டிக்கெட்கொடுக்க மறுத்துவிட்டார்களாம்.பேகம்பேட்டைச் சுற்றி இருந்த ஏரியாக்கள் டிராபிக்ல்தத்தளித்தது. ஆமை வேகம் கூட இல்லாமல் வண்டிகள்அங்கங்கே நின்று கொண்டிருந்தனவாம்.(கீழே உள்ள படத்தில் இருப்பது கண்காட்சி அரங்கும்மக்களும்(கண்ணாடியில் பிரதபலித்ததை எடுத்தோம்)) விமான நிலையத்தில் இருக்கும் அயித்தானின் நண்பர் எச்சரித்திருந்ததால்காலை 9.30 மணிக்கு போனோம். டிக்கட் (ஒருவருக்கு 150 ரூபாய்)வாங்கிக்கொண்டு உள்ளே போனோம்.ஏர் இந்தியா மற்றும் கிங்ஃபிஷர் விமானம் 2 நின்று கொண்டிருந்தது.சில ஹெலிகாப்டர்கள் இருந்தன.ஆனால் இவைகளை விட கண்காட்சி மிக நன்றாக இருந்தது.மினியேச்சர் ஹெலிகாப்டர்கள், போயிங், ஏர்பஸ் (இவை இரண்டும்தான் விமான தயாரிப்பு கம்பெனிகள்) மாடல்கள், எனஅருமையாக இருந்தது. காக்பீட்டினுள் எப்படி இருக்கும் என்பதை ஷோவாக காட்டிக்கொண்டிருந்தார்கள்அனுமார் வாலைவிட பெரிய வரிசை இருந்ததால் போகவில்லை.


மேலும் சில புகைப்படங்களுக்கு
இங்கே ஆஷிஷ்.
அம்ருதா.பிளாக்கில்.

2 comments:

மங்களூர் சிவா said...

நல்லா என்ஜாய் பண்ணீங்களா!

good good.

pudugaithendral said...

வாங்க சிவா,

நல்லா என்ஜாய் செஞ்சோம்