சென்ற விடுமுறைக்கு நாங்கள் மாமல்லபுரம் சென்றிருந்தோம்.
அப்போது மாயாஜால், தக்ஷின் சித்ரா, எம்.ஜீ.எம், முதலைகள்
பண்ணை எல்லாம் பார்த்தோம்.
தக்ஷின் சித்ரா- தெந்நிந்தியாவில் வீடுகள் எப்படி இருக்கும்னு
அங்கே தெரிஞ்சுக்கலாம்னு அப்பா சொன்னாங்க.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வில் வீடுகள்
அமைப்பு எப்படி இருக்கும்னு அங்க போனா பாக்கலாம்.
கர்நாடகாவின் வீடு ஒன்றில் எடுத்த படம் இது.
அங்கே போன போது, ஜாலிக்காக கிளி ஜோசியம் பார்த்தோம்.
சீட்டை எடுத்து கொடுத்திட்டு “அக்கா.. அக்கா” அப்படின்னு
அந்த கிளி பேசினது க்யூட்.
எனக்கு தமிழ்நாட்டு வீடுகள் ரொம்ப பிடிச்சிருந்தது.
ஒரு வீட்டுல கூடை பின்னுதல் சொல்லிக்கொடுத்தாங்க.
நானும் அண்ணாவும் கூடை சின்னதுதான் செஞ்சோம்.
அங்கே அந்தக்கால மாவரைக்கர மிஷின் இருந்துச்சு.
கல்லால ஆன அதை இழுக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
மிக்ஸி, மிஷன் எல்லாம் இல்லாம அப்ப ரொம்ப
கஷ்டப்பட்டு மாவரைச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்.
அம்மா சொன்னாங்க அதனாலதான் அப்போதைய
பெண்களுக்கு கை வலிமை ஜாஸ்தி. திருடனைக்கூட
அடிச்சே விரட்டிடுவாங்கன்னு. இருக்கும்!! அந்த உரல்
எவ்வளவு ஸ்ட்ராங்!!
மழைநீரை சேகரிச்சு கீழே கொண்டு வரும் தோணித்தகரம்,
முற்றம் இதெல்லாம் காட்டி அம்மா சொன்னப்ப அது
மாதிரி ஒரு வீடு கட்டலாம்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன்.
Tuesday, July 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
படங்கள் யாவும் அருமை கண்ணுங்களா!
நீங்கள் கட்டும் அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்துக்கு மறக்காம எங்களை எல்லாம் கூப்பிடணும், சரியா:)?
//“அக்கா.. அக்கா” அப்படின்னு
அந்த கிளி பேசினது க்யூட். //
கிளி பேசியதும் க்யூட், நீங்க எழுதினதும் க்யூட்.
சரி ஆண்ட்டி, கண்டிப்பா கூப்பிடறோம்.
தாங்க்ஸ் ஜானி அங்கிள்
Post a Comment