Monday, August 4, 2008

தமிழ் சமையல் இவ்வாரத்திட்டம்- இனிப்பு

இவ்வாரத்திட்டம் இனிப்பிற்காக என் பதிவு.

இது போளி. பொப்பட்லு தெலுங்கு, உப்பட்லு கன்னடம்,
பூரண் போளி - மராதி.

எங்களது தெலுங்கு வருடப்பிறப்பன்று கட்டாயம்
செய்யப்படவேண்டிய இனிப்பு.

தேவையான பொருட்கள்:

மைதா- 1 கப்

கடலைப் பருப்பு - 1 கப்

சர்க்கரை - 1 கப்

ரீஃபைண்ட் ஆயில், தண்ணீர் இரண்டும்
சம அளவு (தனித்தனி டம்பளரில் இரண்டும்
ஒரே அளவு இருக்க வேண்டும்)

உப்பு கொஞ்சம்,
மஞ்சள் தூள் 1 சிட்டிகை.

தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை:

மேல்மாவு தயாரிக்க:
மைதாமாவில் மஞ்சள், உப்பு சேர்த்து
ஒருமுறை எண்ணைய், ஒருமுறை தண்ணீர்
என்ற விகிதத்தில் சேர்த்து சப்பாத்தி மாவு
பதத்தில் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பூரணம் செய்ய:

கடலைப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.

ஆறியதும் சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில்
ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.

கடாயில் நெய் கொஞ்சம் விட்டு,
தேங்காய்த்துருவல், அரைத்து வைத்துள்ள
பருப்பு கலவை எல்லாம் போட்டு சுருள்
வதக்கி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல்
வந்ததும் இறக்கி வைக்கவும்.






மேல்மாவில் கொஞ்சம் எடுத்து சப்பாத்தி போல்
செய்து நடுவில் பூரணம் வைக்கவும்.





பூரணத்தை நடுவில் வைத்து மூடி
கொஞ்சம் கையால் தட்டி
அடுப்பில் இருபக்கமும் சுட்டு எடுக்கவும்.

சுடும்பொழுது எண்ணைய் விட தேவையில்லை.
மாவில் இருக்கும் எண்ணையே போதும்.




4 comments:

தெய்வசுகந்தி said...

எனக்கு ரொம்ப பிடிச்ச sweet இது.

pudugaithendral said...

அப்படியா வருகைக்கு மிக்க நன்றி
தெய்வசுகந்தி

Yogi said...

பார்த்தாலே எச்சில் ஊறுது !! :-')

பட்டாம்பூச்சி said...

சூப்பர்......பாக்கவே நல்லா இருக்கு.
உடனே செய்து சாப்பிடணும்போல் உளளது :).