Thursday, March 6, 2008

மழலையர் பாடல்கள்

எங்களுக்கு லிங்க் கொடுத்துட்டாங்க எங்கம்மா,

இதோ அம்மா எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கும்
தமிழ் பாடல்கள் சில.


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.



அணிலே அணிலே ஓடிவா!
அழகிய அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா!
குண்டு பழம் கொண்டுவா!
பாதி பழம் உன்னிடம்
மீதி பழம் என்னிடம்!
கொறித்து கொறித்து தின்னலாம்!


லட்டு லட்டு லட்டு
தட்டு நிறைய லட்டு

வெட்டு வெட்டு வெட்டு
இஷ்டம் போல வெட்டு


இந்தப் பாட்டு அம்மா பாடக் கேட்டிருக்கிறோம்.

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா...

காலை எழுந்ததும் படிப்பு
(ஓர் ரெண்ட் ரெண்டு
ஈர் ரெண்ட் 4)
பின்பு கனிவுக் கொடுக்கும் நல்ல பாட்டு
(ச..ரி..க..ம..ப..த..நி.. ஸ)
மாலை முழுதும் விளையாட்டு
(சடுகுடு சடுகுடு சடுகுடு)
என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா.

நாங்க யாருக்கும் லிங்க் கொடுக்கலை :)

வருகைக்கு நன்றி.

2 comments:

நிஜமா நல்லவன் said...

///ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.////


ஆஷிஷ், அம்ருதா நீங்க இதை எப்பவும் கடைப்பிடித்து நல்லவங்களா வாழணும்.
வாழ்க வளமுடன்.

ஆஷ் அம்ருதா said...

நிஜமா நல்லவன் அங்கிள்

ரொம்ப நன்றி.