நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையின் போது இந்தியா வருவோம். அம்மா, அப்பா முன்னதாகவே திட்டமிடுவார்கள்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஊருக்கு அழைத்துச் செல்வார்கள். (இந்தியாவை விட்டு வெளியே இருப்பதால் நம் நாட்டை குறித்து அறிந்து
கொள்ளுவதற்காக). அப்படி செல்லும் போது தவறாமல் டிரெயினில் போக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். கண்டிப்பாக அழைத்துச் செல்வார்கள்.
நாங்கள் மிகவும் விரும்புவது அந்த ரயில் பயணம். பெரும்பாலும் a/c coach ல் தான் போயிருக்கிறோம் என்றாலும், எங்களுக்குத் தெரிய வேண்டும்
என்பதற்காக 2nd class sleeper coach லும் கூட அப்பா அழைத்துச் சென்றிருக்கிறார்.
சென்னை - பெங்களூர் சதாப்தி டிரெயின் பயணம் மிக நன்றாக இருந்தது.
சிங்கப்பூர், மலேசியா போயிருந்தபோது, சிங்கப்பூர் - மலேசியா டிரெயினில் சென்றோம். அது அவ்வளவு நன்றாக இல்லை.
நம் ஊரில் 3 + 3 + side berths இருக்கும் தானே? ஆனால் அந்த டிரெயினில் எல்லாமே side lower and side upper birth தான்.
முழுதும் குளிருட்டப்பட்டு இருந்தாலும், side lower ticket rate அதிகம்.
side upper ticket விலை குறைவு.
எங்களுக்கு பிடித்தது நம் இந்திய ரயில் தான்.
WE LOVE INDIA.
Thursday, November 29, 2007
Monday, November 26, 2007
எனக்கும் கிடைத்தது பரிசு
எனக்கு பரிசு கிடைத்தது.
இது சென்ற வருடம் பள்ளிக்கூட ப்ராஜக்ட்ற்காக செஞ்சது. என்னோட சேர்த்து எங்கள் டீம்ல் 5 பேர். சுற்றுப்புறம் மாசாவாது எப்படிங்கறது தான் தீம்.
தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீர், அருகில் இருக்கும் நீர் நிலையில் கலக்கிறது, அதனால் அதில் வாழும் உயிர் இனங்கள் அழிகிறது. வீட்டிற்கு அருகே போடப்படும் குப்பைகள், வாகனம் வெளியேற்றும் புகைகள், ஆகியவற்றை குறித்து
தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீர், அருகில் இருக்கும் நீர் நிலையில் கலக்கிறது, அதனால் அதில் வாழும் உயிர் இனங்கள் அழிகிறது. வீட்டிற்கு அருகே போடப்படும் குப்பைகள், வாகனம் வெளியேற்றும் புகைகள், ஆகியவற்றை குறித்து
செய்து, விவரமாக எடுத்து சொன்னோம்.
எங்க டீம் வெற்றி பெற்றது. கோப்பை மற்றும் சர்டிபிகேட் கிடைத்தது.
ஆஷிஷ்.
Saturday, November 24, 2007
Subscribe to:
Posts (Atom)